ஷோரூமுக்கு வெளியே ஒரு நபர், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சம்மட்டியால் அடித்து நொறுக்குவதைக் காட்டும் வீடியோ பவிஷ் அகர்வாலின் ஓலா நிறுவனம் மீது ஆன்லைன் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், ஷோரூம் வாடிக்கையாளர் பெயருக்கு ரூ.90,000 கட்டணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Watch: Customer smashes Ola EV scooter with hammer outside showroom, video goes viral
“ஷோரூம் ரூ.90,000 கட்டணம் கேட்டதால், கோபமடைந்த வாடிக்கையாளர், ஷோரூம் முன் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிவிட்டார்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
வீடியோவைப் பாருங்கள்:
शोरूम ने 90000 का बनाया बिल ग्राहक ने परेशान होकर शोरूम के सामने ही तोड़ दी स्कूटी
— Nedrick News (@nedricknews) November 22, 2024
- सोशल मीडिया पर वायरल हुआ वीडियो.#ola #OlaScooter #viralvideo #ViralVideos #socialmedia #Nedricknews @OlaElectric pic.twitter.com/7JPPtRSf9E
இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளைக் குவித்தது, ஓலாவுக்கு எதிராக புதிய பின்னடைவைத் தூண்டியது. “அவர்கள் குறைந்தபட்சம் உடைந்த பாகங்களுக்கான மதிப்பை வழங்க வேண்டும். இது ஒரு நல்ல வணிகமாகவும் இருக்கலாம், ஏனெனில், எப்போதுமே ஓலா ஸ்கூட்டரின் 'பாகங்கள் கிடைக்காது' என்பதால் என்பதால் இந்த பாகங்களை மீட்டெடுத்து மற்ற பயனர்களுக்கு வழங்க முடியும்" என்று ஒரு பயனர் எழுதினார்.
"மேலும் இந்த நபர் பவிஷ் அகர்வால் (@bhash) ட்ரோன்கள் மூலம் பாகங்கள் டெலிவரி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆட்டோமோட்டிவ் ஒரு ஆழமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விநியோகத் துறையாகும். இது ஒரு செயலி அல்ல.. உங்கள் ஊழியர்களை எவ்வளவு அழுத்தினாலும், முடிவுகள் ஒரே மாதிரியாக இருக்கும்” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
"இதனால்தான் பவிஷ் அகர்வாலின் ஓலா ஸ்கூட்டர் வாங்கும் திட்டத்தை நான் கைவிட்டேன், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நான் பல முறை விசாரித்தேன், ஆனால், மிகவும் அர்ப்பணிப்புள்ள ஓலா வாடிக்கையாளர் பராமரிப்பு குழு குறைந்தபட்சம் தொடர்புகொள்ளக்கூட கவலைப்படவில்லை!" என்று மூன்றாவது பயனர் கூறினார்.
செப்டம்பரில், கர்நாடகாவில் உள்ள ஒரு ஓலா எலக்ட்ரிக் ஷோரூமில் வாடிக்கையாளர் சேவை சரிஇல்லை எனக் கூறி ஷோரூமுக்கு தீ வைத்த 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தகவல்களின்படி, முகமது நதீம் என அடையாளம் காணப்பட்ட அந்த வாடிக்கையாளர், ஸ்கூட்டரை வாங்கிய சில நாட்களில் சர்வீஸ் செய்வதில் சிக்கலை எதிர்கொண்டார். ஸ்கூட்டர் வாங்கப்பட்ட ஷோரூமில் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் ஓலா ஷோரூமுக்கு தீ வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.