Advertisment

தாயைப் பற்றி தவறாக பேசிய வாடிக்கையாளரை அடித்து தும்சம் செய்த ஊழியர்!

அவரின் தாய் பற்றி தரக்குறைவான வார்த்தை கூறி ஊழியரை திட்டியுள்ளார்.

author-image
WebDesk
Jul 31, 2018 12:54 IST
தாயைப் பற்றி தவறாக பேசிய வாடிக்கையாளரை அடித்து  தும்சம் செய்த ஊழியர்!

மெக்டொனால்டு ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை கண்மூடித்தனமாக தாக்கி அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அமெரிக்காவில் செயல்படும் மெக்டொனால்டு கடைகளில் பணிப்புரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துக் கொள்ளும் முறைப்பற்றி ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் பேசும் வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிரதான சாலையில் செயல்படும் மெக்டொனால்டு ஒன்றிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்கு பணிப்புரியும் ஊழியரிடம் ப்ரீ சோடா வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.அதற்கு அந்த ஊழியர் பீர் சோடா இல்லை என்று கூறி அங்கிருக்கும் சோடா இயந்திரத்தை வேகமாக மூடியுள்ளார்.

இதைப்பார்த்து கோபம் அடைந்த பெண், ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். கோபத்தின் விளிம்பில் அங்கிருந்த மில்க் ஷேக்கை எடுத்து ஊழியரின் முகத்தில் ஊற்றி விட்டு, அவரின் தாய் பற்றி தரக்குறைவான வார்த்தை கூறி ஊழியரை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மெக்டொனால்டு ஊழியர், அந்த பெண்ணை சரமாரியாக அடித்தார். அப்போது கடையில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் சிலர் இருவரையும் பிடித்து சமாதானம் செய்தனர்.

ஊழியர்க் அந்த பெண்னை இழுத்து, சுவரில் இடித்து ஆடையை கிழித்து மோசமாக நடந்துக் கொண்ட செயல்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#Cctv Footage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment