New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/Asian-Elephant-xl-600x404.jpg)
குட்டியானை ஒன்று இறுதியாக கூட்டத்தில் இருந்து ஒரு படி கீழே இறங்கி சுட்டித் தனமாக நடந்து சென்றது
கொரோனா வைரஸ் காராணமாக மக்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கும், கூட்டம் சேர்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த மே மாதங்களில் நடைபெற வேண்டிய அனைத்து கோவில் திருவிழாக்களும், முக்கியமாக மீனாட்சி திருக்கல்யாணமும் கூட பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.
மேலும் படிக்க : பாம்பை வைத்து மனைவியை கொன்ற விவகாரம் : நாகத்திற்கு போஸ்ட்மார்டம் செய்த விசாரணை குழு
மலைச்சாரல்களில் அமைந்திருக்கும் கோவில்களில் மயில்கள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியது. சில நேரங்களில் வனவிலங்களும் அந்த பகுதியில் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் இந்த சமயத்தை பயன்படுத்தி, கோவையில் இருக்கும் மருதமலை முருகன் கோவிலில் யானைகள் கூடமாக நடந்து போய் நடந்து வருகின்றன.
மேலும் படிக்க : விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா விவாகரத்து செய்ய வேண்டுமாம்: பாஜக எம்எல்ஏ அறிவுரை
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் இருவர் படிகட்டுகளில் கீழே நின்று கொண்டு ஒவ்வொரு யானையாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஒரு குட்டியானையை அனைத்து யானைகளும் மறைத்து அழைத்துச் செல்ல, இறுதியாக கூட்டத்தில் இருந்து ஒரு படி கீழே இறங்கி சுட்டித் தனமாக நடந்து சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.