ஃபீஞ்சல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. சென்னையில் உள்ள தென்மண்டல இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) அறிக்கையின்படி, புயல் காரணமாக அதிகபட்சமாக புதுச்சேரியில் 460 மிமீ மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தெருநாய் ஒன்று சிக்கித் தவித்த வீடியோ வெளியாகி உள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நாயை ஒரு மனிதன் தூக்கி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வது இடம்பெற்றுள்ளது. “புதுச்சேரியில் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கிய நாய் மீட்கப்பட்டது” என்று ஏ.என்.ஐ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
வெள்ளத்தில் நாயைக் காப்பாற்றிய நபரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டியடால் இந்த வீடியோ 22,000 பார்வைகளைப் பெற்றது. இந்த வீடியோ குறித்து ஒரு பயனர் எழுதினார், “நல்ல வேலை. இந்த நாய் மனித நட்புடன் இருந்தது. நல்லது. ஆனால், நாயைத் தூக்கும் நபருக்கு நாய்களுடன் அதிக அனுபவம் இல்லாமல் இருக்கலாம் அல்லது அது நாயே இல்லை என்ற உணர்வை இது அளித்தது. நாயைத் தொட்டதன் மூலம் அதை உணர முடியும். நல்ல மீட்பு பணி” என்று பாராட்டினார். மற்றொரு பயனர், “கருணை எல்லாவற்றையும் வெற்றிகொள்கிறது!” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்கும் மேலாக மெதுவாக நகர்ந்த ஃபீஞ்சல் புயல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதுச்சேரிக்கு கிழக்கே 120 கிமீ, சென்னைக்கு தென்கிழக்கே 110 கிமீ மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 200 கிமீ தொலைவில் கரையைக் கடந்தது. தமிழ்நாட்டில் டிசம்பர் 2-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“