Advertisment

ஃபீஞ்சல் புயல்: அபார்ட்மெண்ட்டை சூழ்ந்த வெள்ளம்: பேரக் குழந்தைகளுக்கு படகு சவாரி தளமாக மாற்றிய நபர்: வீடியோ

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

author-image
WebDesk
New Update
boating flood adventure

ஃபீஞ்சல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. (Image source: @Chai_Angelic/X)

ஃபீஞ்சல் புயல் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் கனமழையைப் பொழிந்து பேரிடரை ஏற்படுத்தியது, 69 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் - 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் - பேரிடரில் சிக்கி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் வெள்ளம் சூழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் படகு சவாரி செய்து வேடிக்கை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த வைரல் வீடியோவை சுட்கி சாய்வாலி (@Chai_Angelic)  என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர் காற்று நிரப்பப்பட்ட படகைக் ஸ்கூட்டரின் பின்னால் கட்டிக்கொண்டு ஓட்டிச் செல்கிறார். அந்த படகில் இரண்டு குழந்தைகளை அமரவைத்து அந்த நபர் வெள்ளம் சூழ்ந்த அபார்ட்மெண்ட் வளாகத்தின் வழியாக ஸ்கூட்டரை ஓட்டுகிறார். 

இந்த வீடியோவுக்கு “தாத்தா தன் பேரக்குழந்தைகளுடன். சென்னை, புயல்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisement

இந்த வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வைகளைக் குவித்து ஏராளமான கமெண்ட்களைப் பெற்றுள்ளது. இந்த வீட்யோ குறித்து ஒரு பயனர் எழுதினார், “தாத்தா பேரக்குழந்தைகளின் முதல் நண்பர் மற்றும் பேரக்குழந்தைகள் தாத்தாவின் கடைசி நண்பர்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர்,  “மோசமான சூழ்நிலைகளிலும் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்றாவது பயனர், “அழகானது - இது ஒரு சிறந்த உதாரணம் - நீங்கள் எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க வேண்டும் - அதைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள்” என்று மூன்றாவது பயனர் பதிலளித்தார்.  “வாழ்க்கை உங்களுக்கு துன்பத்தை தந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று  குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். மாநிலத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபீஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. 

சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, என்.டி.ஆர்.எஃப்-ல் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஃபீஞ்சல் புயல் தாக்கத்தால், கர்நாடகாவின் தட்சிண கன்னடா, குடகு, சாமராஜநகர், உடுப்பி, மைசூரு, சிக்கபள்ளாப்பூர் மற்றும் மாண்டியா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment