திருமணத்துக்கு தயாரான மகனுக்கு அம்மாவின் ஆச்சரிய பரிசு- வைரல் பதிவு

Daal manual : அந்த தாயின் கிரியேட்டிவிட்டியை பலர் பாராட்டியுள்ள போதிலும், அவருக்கு பாலினத்தை பொருட்படுத்த தெரியவில்லை என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர்

By: Updated: July 20, 2020, 05:10:12 PM

விரைவில் திருமணம் நடைபெற உள்ள மகனுக்கு, பருப்பு குறித்த கையேட்டை அவரது அம்மா பரிசாக வழங்கியுள்ளதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பாலினம் சார்ந்த பணிகள் குறித்த விவாதத்தையும் இந்த பதிவு துவக்கிவைத்துள்ளது.

பல்வேறு வகையான பருப்புகளை சிறிதளவு எடுத்து அதை பேக் செய்து ஒரு பேப்பரில் ஒட்டி கீழே அதன் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த டுவிட்டர் பதிவை, ஐபிஎஸ் அதிகாரி திபான்சு காப்ரா சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.

தாய், விரைவில் திருமணம் நடைபெற உள்ள தனது மகனுக்காக, இதை தயார் செய்துள்ளார் என்று காப்ரா அந்த பதிவிற்கு தலைப்பு வைத்திருந்தார்.

பாசிப்பருப்பு முதல் சிவப்பு பருப்பு வரை வகைப்படுத்தப்பட்டு அதில் ஒட்டி பெயர் எழுதப்பட்டு, விரைவில் திருமணம் ஆக உள்ள மகனுக்கான பரிசு என்ற பதிவு, சமூகவலைதளங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

அந்த தாயின் கிரியேட்டிவிட்டியை பலர் பாராட்டியுள்ள போதிலும், அவருக்கு பாலினத்தை பொருட்படுத்த தெரியவில்லை என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

நெட்டிசன்களின் கருத்துகள் இதோ…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Woman’s ‘daal manual’ for soon-to-be-married son wins praise on social media

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Daal manual lentils manual desi tutorials desi jugaad trending news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X