தந்தை-மகள் பாசம்: 'என் அப்பா சூப்பர் ஹீரோதான்!'... இணையத்தை உருக வைத்த குட்டி தேவதைகள்!

தனது குட்டி தேவதைக்காக, தந்தை எதையும் செய்வார். இது பெண் குழந்தைகளுக்கு வலுவான நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உருவாக்குகிறது. இதை நிரூபிக்கும் வகையில், பள்ளியில் நடந்த நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனது குட்டி தேவதைக்காக, தந்தை எதையும் செய்வார். இது பெண் குழந்தைகளுக்கு வலுவான நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உருவாக்குகிறது. இதை நிரூபிக்கும் வகையில், பள்ளியில் நடந்த நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
School Girls

தந்தை-மகள் பாசம்: 'என் அப்பா சூப்பர் ஹீரோதான்!'... இணையத்தை உருக வைத்த குட்டி தேவதைகள்!

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பந்தத்திற்கு ஈடு இணை ஏதும் உண்டா? தனது குட்டி தேவதைக்காக, தந்தை எதையும் செய்வார். இது பெண் குழந்தைகளுக்கு வலுவான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உருவாக்குகிறது. இதை நிரூபிக்கும் வகையில், பள்ளியில் நடந்த நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

தந்தை-மகள் பாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான காணொளி, இணையத்தில் பலரின் இதயங்களை வென்றுள்ளது. அதில், 'உங்கள் தந்தைகள் நிஜமான சூப்பர் ஹீரோக்களா?' என்று கேட்கப்பட்டபோது, டஜன் கணக்கான குட்டி சிறுமிகள் ஆர்வத்துடன் தங்கள் கைகளை உயர்த்தினர்.

பள்ளிக் கூடத்தில் அமர்ந்திருக்கும் குட்டிக் குழந்தைகளிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்கிறார். அதுவும், சாதாரண கேள்வி அல்ல. "உங்கள் அப்பாவால் இரவு நேரங்களில் மாடியிலிருந்து மாடிக்குத் தாவிச் செல்லும் சூப்பர்மேன் போல பறக்க முடியுமா?" எத்தனை பேர் நம்புகிறீர்கள்?" என்று கேட்கிறார். சின்னஞ்சிறு மனங்கள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. முகத்தில் ஒளி வீசும் புன்னகையுடன், உற்சாகமாக தங்கள் கைகளை உயர்த்தின. அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், "ஆமாம், என் அப்பா சூப்பர் ஹீரோதான்!" என்ற அழுத்தமான நம்பிக்கை தெரிந்தது.

Advertisment
Advertisements

இந்தக் காணொளியை Times Now தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "தங்கள் அப்பாவை வெறும் ஹீரோவாக மட்டும் இல்லாமல், அவர்களால் உண்மையிலேயே பறக்க முடியும் என்று நம்பும் இந்த பிஞ்சு மனங்களின் எண்ணங்கள் அலாதியானது" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகள் தங்கள் அன்பையும், சிலிர்ப்பையும் வெளிப்படுத்தத் தவவில்லை. ஒரு பயனர், "எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கனவு காண்பதற்கான காரணம் இதுதான்" என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், "என் அப்பா என் சிறந்த நண்பர், என் ரகசியங்களை அறிந்தவர்" எனத் தன் தந்தையுடனான பந்தத்தைப் பகிர்ந்துகொண்டார். "சின்ன வயதில் என் அப்பா ஒரு ரயில் என்ஜினையே இழுப்பார் என்று நினைத்தேன். இப்போதும் அவர் என் ஹீரோதான்" என்று ஒருவர் தன் குழந்தைப்பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஒரு தந்தையின் உழைப்பையும், அன்பையும் சூப்பர் சக்திகளாகப் பார்க்கும் அந்த வெள்ளந்தி மனம், உலகத்தின் மிக அழகான காட்சிகளில் ஒன்று. இந்தக் காணொளியும், அதற்கு வந்த அன்பான பதில்களும், தந்தைகள் தங்கள் மகள்களுக்கு ஒருபோதும் சாதாரணமானவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகின்றன.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: