New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/28/navi-mumbai-leads-to-arrest-2025-07-28-09-30-45.jpg)
ஆடம்பர காரில் ஆபத்தான நடனம்... ஸ்கெட்ச் போட்டு தட்டித் தூக்கிய காவல்துறை!
நவி மும்பையின் கார்கர் பகுதியில், ஓடும் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் பானெட்டில் ஏறி, இளம்பெண் "ஆரா ஃபார்மிங்" (Aura Farming) என்ற வைரல் நடனத்தை ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியுள்ளது.
ஆடம்பர காரில் ஆபத்தான நடனம்... ஸ்கெட்ச் போட்டு தட்டித் தூக்கிய காவல்துறை!
நவி மும்பையின் கார்கர் பகுதியில், ஓடும் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் பானெட்டில் இளம்பெண், "ஆரா ஃபார்மிங்" (Aura Farming) நடனத்தை நிகழ்த்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த ஆபத்தான சாகசம் போக்குவரத்து காவல்துறையின் கவனத்தைப் பெற்றுள்ளது. "போட் டான்ஸ்" என்றழைக்கப்படும் இந்த "ஆரா ஃபார்மிங்" நடனம், தற்போது இணையப் பிரபலமாக மாறியுள்ள 11 வயது இந்தோனேசியச் சிறுவன் ரய்யான் அர்கான் டிக்கா என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது.
வீடியோவில் நடந்தது என்ன?
வைரலான வீடியோவில், அந்தப் பெண் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் பானெட்டில் நின்று கொண்டு, சாலையில் நகர்ந்து கொண்டிருக்கும்போதே நடனமாடி, ரீல் பதிவு செய்ய முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.
விசாரணையில், காரை ஓட்டியவர் அப்பெண்ணின் காதலன் என்றும், உரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. வீடியோவின் தலைப்பில், “On my way to the 69th heartbreak with the same guy” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
காவல்துறை நடவடிக்கை:
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த வீடியோ நவி மும்பையில் படமாக்கப்பட்டது. இது வைரலான உடனேயே போக்குவரத்து காவல்துறையின் கவனத்தை ஈர்த்தது. நவி மும்பை காவல்துறை உடனடியாக கார் ஓட்டுநரைக் கைது செய்துள்ளது. மேலும், ஆபத்தான வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓடும் வாகனத்தின் பானெட்டில் நின்று கொண்டு அந்தப் பெண் ரீல் படமாக்கியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
"இதுபோன்ற செயல்கள் சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் தீவிர ஆபத்தை விளைவிக்கும். சமூக வலைத்தளங்களில் 'லைக்' பெறுவதற்காக பொதுமக்களின் பாதுகாப்பைப் பணயம் வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் இதுபோன்ற வீடியோக்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.