திருமணங்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. இதுவரை, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதையும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதையும் நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இங்கு தனது 50 வயது தாய்க்கு மகள் ஒருவர் மறுமணம் செய்துவைத்துள்ளார். இந்தத் திருமணம் ஷில்லாங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது.
தனது தாய்க்கு திருமணம் செய்துவைத்தவர் ஷில்லாங்கைச் சேர்ந்த பெண் டெப் ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி ஆவார். இவர் இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பான காணொலியை பகிர்ந்திருந்தார்.
தற்போது இந்தக் காணொலிகள் இணையத்தில் பலரின் இதயத்தையும் கவர்ந்துவருகின்றன. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் டெப் ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி , “அம்மா. இவர் போன்ற அற்புதமான, தைரியமான மற்றும் நம்பிக்கையான பெண்ணை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை.
நீங்கள் ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் ஒரு அற்புதமான பெண். உங்களுக்காக விரும்புவது அன்பும் மகிழ்ச்சியும் ஆகும்.
உங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்க வாழ்த்துகிறேன், மேலும் நீங்கள் சிறந்ததற்கு மட்டுமே தகுதியானவர். நீங்கள் மிகவும் அழகான மணமகளாக இருந்தீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான நெஞ்சங்களை வென்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/