Daughter tweets about mother wedding : இந்தியாவில் பெண்களுக்கு இரண்டாம் திருமணம் என்பது இன்னும் பல பகுதிகளில் பரவலாக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதும், பெரும்பாலான நேரங்களில் திருமணத்திற்கு பிறகு பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருப்பது, குழந்தைகள் என பல சாக்குகளை வைத்துக் கொண்டு பிடிக்காத திருமண பந்தத்தில் பெண்களை வாழ அவர்களின் பெற்றோர்கள் கட்டயாப்படுத்துவதை நாம் பல இடங்களில் கண் கொண்டு பார்த்திருக்கின்றோம். ஆனால் இங்கே 15 ஆண்டுகளுக்கு முன் மோசமான திருமண உறவில் இருந்து வெளியேறிய பெண்ணுக்கு அவருடைய மகளே திருமணம் செய்து வைத்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
@alphaw1fe என்ற ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அம்மாவின் திருமணம் குறித்த அப்டேட்டுகளை பதிவிட்டு வருகிறார் அவருடைய மகள். ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் இன்னொரு ஆண் வரக்கூடாது என்று நானும் என்னுடைய 16 வயது தம்பியும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இன்றோ? தந்தை உருவில் எங்கள் வீட்டிற்கு ஒருவரை அழைத்து வருவதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த அம்மா-பொண்ணுக்கும் மட்டுமின்றி புதுமண தம்பதியினருக்கும் பலர் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil