Advertisment

முதலில் முடி அப்புறம்… ஆசையாய் வாங்கிய சாக்லேட் சிரப்பில் காத்திருந்த அதிர்ச்சி; வைரல் வீடியோ

ஆன்லைனில் ஆர்டர் செய்த சாக்லேட் சிரப்பில் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
mouse vira.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் ஜெப்டோ (Zepto) ஆன்லைன் தளத்தில் ஹெர்ஷே (Hershey) நிறுவனத்தில் இருந்து சாக்லேட் சிரப் (chocolate syrup) வாங்கியுள்ளார்.

Advertisment

அதை  வாங்கிய ஓபன் செய்து பயன்படுத்தியதும் முதலில் முடி முடியாக வந்துள்ளது பின்னர் பாட்டிலை திறந்து ஊற்றியதும் அதை இறந்து எலி கிடந்ததைக் கண்டு அந்த குடும்பத்தினர்  அதிர்ச்சியடைந்தனர். இதை சாப்பிட்ட 3 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டடதாக பதிவிட்டுள்ளனர் .

பிரமி ஸ்ரீதர் என்ற பெண் கேக்குடன் சாக்லேட் சிரப் சேர்த்து சாப்பிட ஆன்லைனில் ஹெர்ஷே நிறுவனத்தில் இருந்து சாக்லேட் சிரப் வாங்கி உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் இது எலி தான் என்பதை உறுதிப்படுத்த அதை தண்ணீரிலும் கழுவியுள்ளனர். 

இதை அறியவதற்கு முன்னரே இந்த சிரப் சாப்பிட்ட 3 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஹெர்ஷே மன்னிப்பு கோரியது. "இதற்கு மன்னிக்கவும். பாட்டிலில் உள்ள குறிப்பு எண் . 11082163 என்பதையும் UPC மற்றும் உற்பத்திக் குறியீட்டை (manufacturing code)  எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அனுப்பவும். எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்" என்று கூறப்பட்டுள்ளது.  

முன்னதாக, இதுகுறித்து புகார் செய்ய முயன்றோம் ஆனால் புகார் அளிக்க முடியவில்லை என பிரமி ஸ்ரீதர் கூறினார். மேலும் அவர் கூறுகையில்,  இதை அறியவதற்கு முன் 3 பேர் சாப்பிட்ட நிலையில் 2 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டது. பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இப்போது நலமாக உள்ளார் என்று கூறினார். 

மேலும் இதுபோன்று வாங்கும் போது  குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் அதை நன்கு பார்த்து கொடுக்கும் படி எச்சரிக்கை பதிவாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும், இது மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Tamil Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment