New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/deer.jpg)
Social media viral, photoshoot, USA, michigan, deer, couple, வைரல், போட்டோசூட், அமெரிக்கா, மிக்சிகன், மான், தம்பதி
Deer crashes photoshoot : புதுமண தம்பதி போட்டோசூட்டில் ஈடுபட்டிருந்தபோது, குறுக்கே வந்த மான், அவர்கள் வைத்திருந்த பூங்கொத்தை சாப்பிட்ட போட்டோ மற்றும் வீடியோ டிரென்ட் ஆனது மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Social media viral, photoshoot, USA, michigan, deer, couple, வைரல், போட்டோசூட், அமெரிக்கா, மிக்சிகன், மான், தம்பதி
அமெரிக்காவின் மிக்சிகன் நகரத்தில் புதுமண தம்பதி போட்டோசூட்டில் ஈடுபட்டிருந்தபோது, குறுக்கே வந்த மான், அவர்கள் வைத்திருந்த பூங்கொத்தை சாப்பிட்ட போட்டோ மற்றும் வீடியோ டிரென்ட் ஆனது மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மிக்சிகன் நகரத்தை சேர்ந்தவர்கள் மார்கன் - லியுக் மேக்லே . இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. புதுமணத்தம்பதியான. இவர்கள் அழகான போட்டோசூட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக, அவர்கள் சவுகாடக் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் போட்டோசூட் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அது தோட்டம் என்பதால், மான் உள்ளிட்ட விலங்குகளின் பின்னணியில் இவர்களது போட்டோசூட் போய்க்கொண்டிருந்தது. அப்போது அழையா விருந்தாளியாக வந்த மான் ஒன்று, இந்த தம்பதியின் அருகே வந்தது. அவர்களும் முதலில் பயப்பட்ட நிலையில், பின் அது சென்று விடும் என்று நினைத்து தங்களது பணியினை தொடர்ந்து கொண்டிருந்தனர். அந்த மான், திடீரென்று, மேக்லே கையில் வைத்திருந்த பூங்கொத்துவில் இருந்த பூக்களை உண்ணத்துவங்கிவிட்டது.
மேக்லே, அந்த பூங்கொத்தை கீழே போட்டது, அந்த மானுக்கு வசதியாக போய்விட்டது. அனைத்து பூக்களையும் சாப்பிட்டபின்னரே,மான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது. இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.