ஒரு மான், சிறுத்தையை முகத்திற்கு நேராக பயம் இல்லாமல் நலம் விசாரிக்கும் பார்த்திருக்கிறீர்களா? இதோ இந்த வைரல் வீடியோவில் மான் எப்படி சிறுத்தையை நலம் விசாரிக்கிறது என்று பாருங்கள்.
“பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது... கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது.” என்ற கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் வரிகளை பலரும் தங்கள் நிலை தாழ்ந்த தருணங்களில் நினைவு கூறுவது உண்டு.
அப்படி, மனிதர்களின் வாழ்க்கையில் மட்டும் அல்ல விலங்குகளின் வாழ்விலும் உண்மையாகவே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இங்கே அதே பாம்பு கருடன் இல்லை. மாறாக, மான் சிறுத்தை இடம்பெற்றுள்ளது.
வேலிக்குள் இருக்கும் மான், வேலியோரம் இருக்கும் புற்களை மேய்ந்துகொண்டிருக்கும்போது வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு சிறுத்தை மானைப் பார்த்துவிட்டு பதுங்கி பாய்ந்து தாக்கலாம் என்று மெல்ல பதுங்கி வருகிறது. பின்னர் அருகே வந்து பாய்கிறது. ஆனால், அது வேலியால் தடுக்கப்பட்டு நிற்கிறது. மான் சிறுத்தையைக் கண்டு எந்த பயமும் இல்லாமல் மிகவும் இயல்பாக புற்களை மேய்ந்துகொண்டிருக்கிறது. சிறுத்தை வேலியின் சந்துக்குள் தலையை நுழைத்து மானைக் கடித்துவிடலாம் என்று முயற்சிக்கிறது. அப்போதும் அந்த மான் சிறுத்தை முகத்துக்கு நேராக நலம்விசாரிப்பது போல பார்க்கிறது.
இப்போது, பாருங்கள், கண்ணதாசன் வரிகள் இந்த இடத்திலும் பொருந்திப் போகிறது இல்லையா?
வேலிக்குள் இருக்கும் மானை, சிறுத்தை தாக்க முடியாமல் அல்லாடுவதையும் மான் எந்த பயமும் இல்லாமல் புற்களை மேய்கிற இந்த வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி சுஸந்த நந்தா ட்விட்டரில் ‘விண்டோ ஷாப்பிங்’ என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"