viral video: காட்டில் வேட்டையாட கூட்டமாக வந்த கழுதைப்புலிகளுக்கு மான்கள் ஒரு செம டெக்னிக் மூலம் அல்வா கொடுத்து தப்பிய வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள் மான்களின் இந்த டெக்னிக்கை அசந்து போவீர்கள்.
காடு நிறைய அதிசயங்களையும் அற்புதங்களையும் தன்னகத்தே மறைத்து வைத்திருக்கிறது. காடுகளில் உள்ள வனவிலங்குகள் எல்லாமே தனித்துவமானவை. காடுகளே உணவுச் சங்கிலி இன்னும் பொருத்தமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற இடமாக இருக்கிறது.
வன விலங்குகளில் மான்கள் மிகவும் அழகானவையாகவும் மனிதர்களை ஈர்க்கக் கூடியாதாகவும் இருக்கின்றன. வன விலங்குகளில் கூட்டமாக சேர்ந்து சிங்கம், புலி போன்ற விலங்குகளைக்கூட வீழ்த்திவிடும் வலிமை கொண்டவையாக கழுதைப்புலிகள் (Hyenas) இருக்கின்றன.
கழுதைப்புலிகள் மிகவும் வலிமையான விலங்குகளாக இருக்கின்றன. கழுதைப்புலிகள் வேட்டையாடுவதில் மிகவும் தீவிரமாக மூர்க்கமாக செயல்படக்கூடியவை. இரையைப் பார்த்துவிட்டால் வீழ்த்தாமல் விட்டுச் செல்லாது. அப்படிப்பட்ட கழுதைப்புலிகளுக்கே மான்கள் ஒரு செம டெக்னிக் மூலம் அல்வா கொடுத்து உயிர் தப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதாராமென் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், காட்டில் உள்ள மலையில் ஒரு பெரிய உயரமான பாறையின் சரிவில் மான்கள் நின்று கொண்டிருக்கின்றன. மான்களைப் பார்த்துவிட்ட கழுதைப்புலிகள் வேட்டையாட கூட்டமாக வருகின்றன. ஆனால், மான்கள், அந்த பாறையின் மான்கள் அந்த உயரமான பாறையின் சரிவில் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன. அந்த கழுதைப்புலிகளால் மான்களை நெருங்கவே முடியவில்லை. கொஞ்சம் கீழே இறங்கினால் கூட, கழுதைப்புலிகள் கீழே விழ நேரிடும். அதனால், முயற்சி செய்து பார்த்த கழுதைப்புலிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்கின்றன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மான்கள் சரிவான பகுதிகளில் கூட சாமர்த்தியமாக நிற்கக்கூடியவை. மான்கள் தங்களுடைய இந்த செம டெக்னிக் மூலம் கழுதைப்புலிகளுக்கே அல்வா கொடுத்து உயிர் தப்பியிருக்கின்றன.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமென் குறிப்பிடுகையில், “இந்த வீடியோ உங்களுக்கு ஒரு சிறந்த மேலாண்மை உத்தியை கற்பிக்கும். உங்கள் திறமையை நம்புங்கள். அதன் மூலம் உங்கள் லட்சியைத்தை அடையுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரையைப் பார்த்துவிட்டால் வேட்டையாடாமல் விடாத கழுதைப்புலிகளை மான்கள் தங்கள் தனித்துவமான திறன் மூலம் தப்பிய வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மான்களின் டெக்னிக்கைக் கண்டு வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.