டெல்லியில் வெள்ளம் புகுந்த பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா; தண்ணீர் மேல தண்ணி போட்ட பத்திரிகையாளர்கள்: வைரல் போட்டோ

இந்த இடுகையைப் பார்த்ததும், பல சமூக ஊடக பயனர்கள் டெல்லியில் உள்ள பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவை ‘வாட்டர் கஃபே’ என்று நகைச்சுவையாக அழைத்தனர்.

இந்த இடுகையைப் பார்த்ததும், பல சமூக ஊடக பயனர்கள் டெல்லியில் உள்ள பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவை ‘வாட்டர் கஃபே’ என்று நகைச்சுவையாக அழைத்தனர்.

author-image
WebDesk
New Update
press club of india

இந்த புகைப்படம் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது

டெல்லியில் புதன்கிழமை மாலை பெய்த கனமழையால், நகரின் பெரும்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. நகரில் பல இடங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளின் காட்சிகளுடன் சமூக ஊடகங்கள் பரபரப்பாக உள்ளன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Delhi rains: Viral photo shows journalists drinking in flooded Press Club of India

லுட்யென்ஸ் டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பத்திரிக்கையாளர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நாற்காலிகளில் உட்கார்ந்து, மது பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிடுவது புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹிந்துஸ்தான் செய்தித்தாளின் பத்திரிக்கையாளரான ஹேமந்த் ரஜவுரா, “இது டெல்லியில் உள்ள பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவின் காட்சி” என்று கூறி புகைப்படத்தை எக்ஸ் சமூக் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

wஎஇந்தப் புகைப்படம் ஏற்கனவே 131.2K பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பதிவுக்கு கமெண்ட் செய்த ஒரு எக்ஸ் பயனர், “மழை பெய்யும் போது உங்கள் கட்டிடத்திற்கு வெளியே அதிக எக்ஸ்யூவிகள் இருக்கும்போது இது நிகழ்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், “என்ன ஒரு கூலான மக்கள், அவர்களின் பார்ட்டி நிற்பதாகத் தெரியவில்லை.” என்று கமெண்ட் செய்துள்ளார்.

ஒரு எக்ஸ் பயனர் நகைச்சுவையாக, “இதை போட் கிளப் என்று அழைப்போம்....” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் எக்ஸ் பயனர், “அது இப்போது  ‘வாட்டர் கஃபே’ என்று அழைக்கப்படும்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: