Advertisment

சி.ஏ தேர்ச்சி பெற்ற டீ விற்பவரின் மகள்; மகிழ்ச்சியில் சாலையில் கட்டிப்பிடித்து அழுத தந்தை, மகள்: வைரல் வீடியோ

Viral Video: டெல்லியில் சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்ற டீ விற்பவரின் மகள், மகிழ்ச்சியில் சாலையில் தந்தையும் மகளும் கட்டிப்பிடுத்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ca exam cracks tea seller daughter

சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அமிதா பிரஜாபதி மகிழ்ச்சியில் சாலையில் தனது தந்தையைக் கட்டிப் பிடித்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  (Image source: @misscaamitaprajapati/LinkedIn)

டெல்லியில் சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்ற டீ விற்பவரின் மகள், மகிழ்ச்சியில் சாலையில் தந்தையும் மகளும் கட்டிப்பிடுத்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தனது மகள் பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து டீ விற்பவர் மகிழ்ச்சியில் கதறி அழும் உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அமிதா பிரஜாபதி, சமீபத்தில் தனது 10 வருட கடின உழைப்பைப் பற்றி ஆன்லைனில் தனது தந்தையை கட்டிப்பிடித்து அழும் வீடியோவுடன் எழுதினார்.

ஆங்கிலத்தில் படிக்க: Delhi tea seller’s daughter cracks CA exam, video of her father breaking down goes viral

லிங்க்டுஇன் தளத்தில் ஒரு நீண்ட பதிவில், பிரஜாபதி ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதாகவும், அவருடைய தந்தை தனது கல்விக்காக எல்லா சிக்கல்களையும் எதிர்கொண்டதாகவும் எழுதினார்.  இது 10 ஆண்டுகள் ஆனது. ஒவ்வொரு நாளும், என் கண்களில் கனவுகளுடன், இது கனவா அல்லது இது எப்போதாவது நிறைவேறுமா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். ஜூலை 11, 2024, இன்று அது உண்மையாகிவிட்டது. ஆம், கனவுகள் நனவாகியுள்ளது” என்று அவர் எழுதியுள்ளார்.

அமிதா பிரஜாபதியின் லிங்க்டுஇன் பதிவு மற்றும் வீடியோவைக் காண இந்த இணைப்பை கிளிக் செய்யுங்ள்: Delhi tea seller’s daughter cracks CA exam, video of her father breaking down goes viral

மேலும், ‘டீ விற்று அவளை இவ்வளவு படிக்கவைக்க முடியாது, பணத்தை மிச்சப்படுத்துங்கள், அதற்குப் பதிலாக வீடு கட்டுங்கள் என்று சொல்வார்கள். வளர்ந்த மகள்களுடன் தெருவில் எவ்வளவு காலம் வாழ்வீர்கள்? எப்படியிருந்தாலும், ஒரு நாள் திருமணமாகி அவர்கள் வேறொருவரின் வீட்டுக்கு சென்றுவிடுவார்கள், உங்களுக்கு எதுவும் மிச்சமிருக்காது என்று கூறினார்கள். ஆம்,  “நிச்சயமாக, நான் ஒரு சேரியில் வாழ்கிறேன் (மிக சிலருக்கு இது தெரியும்), ஆனால் இப்போது நான் வெட்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவின் முடிவில் எழுதியிருப்பதாவது: “பதிவை முடித்துக்கொண்டு, “இன்று நான் என்னவாக இருந்தாலும், என் அப்பாவும் அம்மாவும் என்னை மிகவும் நம்பியதற்குக் காரணம், ஒரு நாள் நான் அவர்களை விட்டு விலகுவேன் என்று நினைக்கவில்லை, மாறாக நான் என் மகள்களுக்கு கல்வி கற்பிப்பேன் என்று நினைத்தேன்” என்று எழுதினார்.

சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அமிதா பிரஜாபதி மகிழ்ச்சியில் சாலையில் தனது தந்தையைக் கட்டிப் பிடித்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த வாரம், ஒரு காய்கறி விற்கும் பெண் தனது மகன் சி.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து அழுத வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. தானேவின் டோம்பிவிலியில் (கிழக்கு) காய்கறி விற்பவரின் மகன் யோகேஷ், அவரது தாயார் சாலையோரம் உள்ள காய்கறிக் கடையில் இருந்தபோது தான் சி.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்றதைக் கூறியபோது, மகிழ்ச்சியில் தனது மகனைக் கட்டிப்பிடித்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை நெகிழச் செய்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment