இனிக்கும் ‘பிங்க் டீ’… ட்ரை செய்து நொந்து போன பிளாகர் – வைரல் வீடியோ

இணையத்தில் ரூஹ் அஃப்சா கலந்த உணவுகள் ஹிட் அடிப்பது முதல்முறை அல்ல. முன்னதாக, மேகியுடன் ரூஹ் அஃப்சா பானத்தை கலந்து சாப்பிட்ட காணொலி வைரலானது குறிப்பிடத்தக்கது

சாலையோர கடைகளில் விதவிதமான உணவுகளுக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது. கற்பனை கூட செய்ய முடியாத பல வகையான உணவுகளின் காம்பினேஷன்களை பார்த்து வியந்திருப்போம். இதற்காகவே ஏரளாமான புட் பிளாகர்ஸ், விதவிதமான உணவுகளை ட்ரை செய்து, வீடியோ வெளியீடுவார்கள். அவை, சமூக வலைதளத்தில் மின்னல் வேகத்தில் ட்ரெண்ட் ஆகும்.

அந்த வகையில், பிரபல இன்ஸ்டாகிராம் ஃபுட் பிளாகர் சாடோர் பிரதர்ஸ், அண்மையில் ரூஹ் அஃப்சா (Rooh Afza) என்படும் இனிப்பு பானத்தை தேநீருடன் கலந்துகுடிக்கும் காணொலி வெளியிட்டது பலரை முகம் சுளிக்க வைத்தது. குறிப்பாக, டீ பிரியர்கள் ஸ்வீட் பிங்க் டீயை கண்டு பொங்கி எழுந்தனர்.

டெல்லியில் சாலையோர கடை ஒன்றில், டீ இலைகளுடன் கொதிக்கும் பாலில் பிங்க நிற ஸ்வீட் பானத்தை சேர்க்கிறார். அவை பால் ஒரு நொடியில் பிங்க் நிறமாக மாற்றுவதை வீடியோவில் காணமுடிந்தது. அதனை குலாபி சாய் என அழைக்கின்றனர். அதனை ஆசையாக வாங்கி ஒரு சிப் அடித்ததும், ஃபுட் பிளாக்கரின் முகம் சுளித்தது, மீதமுள்ளவற்றை தரையில் ஊற்றினார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பதிவு 2 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றது. தற்போது, பல சமூக வலைதளங்களில் அந்த காணொலி பரவி வருகிறது. வீடியோவை பகிரும் பலர், ஃபுட் பிளாகரின் தைரியத்தை பாராட்டினர்.

இணையத்தில் ரூஹ் அஃப்சா கலந்த உணவுகள் ஹிட் அடிப்பது முதல்முறை அல்ல. முன்னதாக, மேகியுடன் ரூஹ் அஃப்சா பானத்தை கலந்து சாப்பிட்ட காணொலி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi vendor gulabi chai with the sweet syrup goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express