New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/delivery-person.jpg)
அந்த பெண் “தேங்க் யூ” என்று கூறும் காட்சிகளும், அதன் பின்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டே தன்னுடைய வாகனத்தை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
Delivery person finds treats on doorsteps, her happy reaction wins hearts online : மிசிசிப்பியில் குடியிருக்கும் ஒரு தம்பதியினர் தங்களுக்கு டெலிவரி தரும் நபர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரும் வகையில் வீட்டின் முன்பு கிஃப்ட்களை வைத்துள்ளனர். ஒரு பாத்திரம் நிறைய திண்பண்டங்கள் வைத்திருந்தனர். அதனை பார்த்த அந்த பெண் மிகவும் சந்தோசமாக இருக்கும் காட்சிகள் நஷந்திர ஜேம்ஸின் வீட்டின் முன்பு பொறுத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது.
My wife has made a UPS drivers day today. She orders so much stuff during the holidays, that’s she leaves snacks for all...
Posted by Steven James on Saturday, 12 December 2020
யு.பி.எஸ். டெலிவரி செய்ய வந்த அந்த பெண், அந்த திண்பண்டங்களில் சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து கையில் வைத்த வண்ணம் கேமரா முன்பு வந்த அந்த பெண் “தேங்க் யூ” என்று கூறும் காட்சிகளும், அதன் பின்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டே தன்னுடைய வாகனத்தை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
ஜேம்ஸின் கணவர் ஸ்டீவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இந்த விடுமுறை காலத்தில் என்னுடைய மனைவி நிறைய பொருட்களை ஆர்டர் செய்தார். டெலிவரிக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் வெளியே ஸ்நாக்ஸ்களை வைத்திருந்தார். இன்று டெலிவரி செய்ய வந்த பெண்ணுக்கு இந்த நிகழ்வு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.