New Update
/indian-express-tamil/media/media_files/QUk47JtukifdqH40Gzeo.jpg)
ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர் வளாகத்தில், ஜூனியர் என்.டி.அர் கட் அவுட் தீப்பிடித்து எரிந்த வீடியோ
ஹைதராபாத்தில் ஆர்.டி.சி எக்ஸ் ரோட்டில் உள்ள சுதர்சன் 35 மிமீ தியேட்டரில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர் வளாகத்தில், ஜூனியர் என்.டி.அர் கட் அவுட் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர் வளாகத்தில், ஜூனியர் என்.டி.அர் கட் அவுட் தீப்பிடித்து எரிந்த வீடியோ
தெலுங்கு சினிமா நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர் படம் ரிலீஸ் ஆகி உள்ளதால், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் திரையரங்குகள் ரசிகர்களால் ஹவுஸ் ஃபுல்லாகி வருகின்றன.
தமிழ் சினிமா ரசிகர்களைப் போலவே, தெலுங்கு சினிமா ரசிகர்களும் தங்கள் அபிமான ஹீரோக்களுக்கு கட் அவுட், பால் அபிஷேகம், மாலை, பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் பார்ப்பதற்கு உற்சாகமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தாலும் அவை சில நேரங்களில் விபத்துகளுக்கு காரணமாகி விடுகின்றன.
அந்த வகையில், ஹைதராபாத்தில் ஆர்.டி.சி எக்ஸ் ரோட்டில் உள்ள சுதர்சன் 35 மிமீ தியேட்டரில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர் வளாகத்தில், ஜூனியர் என்.டி.அர் கட்அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், என்டிஆர்-ன் கட்-அவுட் தீப்பிடித்து எரிந்ததால் அங்கே பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
#Devara, #NTR's cutout was accidentally burnt at Sudarshan Theatre due to large firecrackers placed too close 💔
— The Box Office Buz (@TheBoxOfficeBuz) September 27, 2024
pic.twitter.com/up0B05Qq0E
திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் தீப்பிடித்து எரிவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பட்டாசு வெடித்ததால் கட்அவுட்டில் இருந்த மாலைகளில் தீப்பிடித்து எரிந்ததது தெரியவந்தது. ஹைதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் கட் அவுட் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான மற்றொரு வீடியோவில், என்.டி.ஆர்.யின் பிரமாண்டமான கட்அவுட்டிற்கு ரசிகர்கள் ரத்தம் மற்றும் பால் அபிஷேகம் செய்த காட்சி நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.