Advertisment

தருமபுரி: கிணற்றில் விழுந்த குட்டி யானை; பத்திரமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள் - வீடியோ

தருமபுரியில் கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Mar 11, 2023 18:25 IST
Dharmapuri: baby elephant rescued Forest officials - video Tamil News

Baby elephant rescued Forest officials in Dharmapuri

க. சண்முகவடிவேல்

Advertisment

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கட்டமடுவு பகுதியில் இன்று காலை குட்டியானை ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த யானை திடீரென அப்பகுதி விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிணற்றில் விழுந்து பரிதவித்த குட்டி யானையை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து மீட்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Elephant #Tamilnadu #Dharmapuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment