Advertisment

வெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா! தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ!

ஐபிஎல் 2018ல் சென்னை அணியின் வெற்றிக்குப் பின் தந்தையை நோக்கி ஓடிய மகள் ஸிவாவை, தோனி தூக்கி வைத்துக் கொஞ்சிய காட்சி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ziva-dhoni

ziva-dhoni

ஐபிஎல் 2018ம் போட்டியில் இறுதிச் சுற்றை விளையாடி அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகக் களமிறங்கிய சென்னை அணி, அதிரடியாய் விளையாடி கோப்பையை கைப்பற்றியது. சிஎஸ்கே வெற்றியால் மும்பை மைதானம் திருவிழாக்கோலம் பூண்டது.

Advertisment

இந்த வெற்றிக்குப் பின்னர் சென்னை அணி வீரர்கள் அனைவரும் கோப்பையை கைகளில் பற்றி குழுவாக நிற்கையில், அவர்களில் இருந்து தனித்து நின்றார் தல தோனி. அணியின் வீரர்களுக்குப் பின்னால் நின்றிருந்த தோனி திடீரென குனிந்து தனது கைகளை நீட்டி யாரையோ ஆசையாக வரவேற்றார். ஒரே வினாடியில், காட்சியில் தென்பட்டாள் தோனியின் செல்ல மகள்.

வெள்ளை ஆடை அணிந்து தனது தந்தையை நோக்கி கொழுக்கு மொழுக்கு என்று ஓடி வர, அவளைத் தூக்கி வைத்து மகிழ்ச்சியில் சூறாவளி போல் சுழன்றார் தோனி. வெற்றிக்கோப்பையை கைகளில் ஏந்தி வந்த தோனி, மைதானத்தில் தனது மகளை ஏந்தி அள்ளி அணைத்துக் கொஞ்சியது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, தனது வெற்றியை மகளுக்கு சமர்ப்பித்த சிறந்த தந்தையும் தான்.

Mahendra Singh Dhoni Chennai Super Kings Ipl 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment