‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடும் தோனி, ரைனா மற்றும் ஹர்பஜன் குழந்தைகள்: க்யூட் வீடியோ

மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரைனா மற்றும் ஹர்பஜன் சிங் குழந்தைகள் ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி...

இந்திய கிரிகெட் வீரர்கள், தல மகேந்திர சிங் தோனி, சின்ன தல சுரேஷ் ரைனா மற்றும் புதிய தமிழ்ப் புலவர் ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அனைவரும் அறிந்ததே. இவர்கள் கிரிகெட் விளையாடுவதை வியந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். இவர்கள் சிறப்பாக விளையாட வீடியோக்கள் என்றுமே சமூக வலைத்தளங்களில் பிரபலம் தான். ஆனால் இதற்கெல்லாம் டஃப் கொடுக்க வெளியாகியுள்ளது ஒரு க்யூட் வீடியோ.

தோனி மகள் ஸிவா, ரைனா மகள் கிரேஸியா மற்றும் ஹர்பஜன் மகள் ஹினாயா மூன்று பேர் இணைந்து விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சுரேஷ் ரைனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், மூன்று குட்டி இளவரசிகளும், ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலைப் பாடி விளையாடுகின்றனர். இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது நமது குழந்தைப் பருவம் நினைவுக்கு வரும் அளவிற்கு உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close