ஓய்வு பெறுவதை மறுத்த தோனி; சி.எஸ்.கே வெற்றி குறித்து நெட்டிசன்கள் கமெண்ட்

சி.எஸ்.கே கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார். தோனியின் முடிவு குறித்தும், ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறியது குறித்தும் நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

By: November 2, 2020, 7:37:14 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் ஞாயிற்றுக்கிழமை ஒரு முக்கியமான போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெற்றி கொண்டதன் மூலம் ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அந்த அணியின் நம்பிக்கையை சி.எஸ்.கே தகர்த்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த போட்டி முழுவதும் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தியது. சி.எஸ்.கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பில்லை என்றாலும் அவர்கள் தங்களுடைய இந்த சீசனை வெற்றியுடன் முடித்தனர்.

153 ரன் என்ற வெற்றி இலக்கை துரத்திய சி.எஸ்.கே-வின் தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உடன் தொடங்கினர். ஒரு விக்கெட் இழந்த பின்னரும், எந்த இலக்கை அடைவதை உறுதிசெய்ய அம்பதி ராயுடு நிலைத்து நின்று ஆடினார்.

பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததாலும் இந்த தொடரில் முடிவில் நல்ல ரன்கள் இருந்தபோதிலும், அவர்கள் இந்த ஆண்டின் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு வெளியே சென்றனர். இது சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்வினைகளைத் தூண்டியது. தோனியின் பல ரசிகர்களும் முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஐபிஎல் 2021-ல் விளையாட விரும்புவதாக உறுதிப்படுத்தினார். அந்த தொடர் தற்போது மார்ச் 2021-ல் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் இருந்து சி.எஸ்.கே அணி வெளியேறினாலும் கடைசியாக பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது. ரன்கள் குறைவானதால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் கனவு தகர்ந்தது. அதே நேரத்தில், சி.எஸ்.கே கேப்டன் தோனி இது தனது கடைசி போட்டி அல்ல என்று கூறி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார். தோனியின் முடிவு குறித்து, ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறியது குறித்தும் நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

தோனியிடம் இது அவருடைய கடைசி போட்டியா என்று கேட்டபோது, நிச்சயமாக இல்ல என்று பதிலளித்திருப்பதை ஐபிஎல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சி.எஸ்.கே அணி ஆதரவு ரசிகர்கள் இந்த போட்டி எப்படி தொடங்கியது எப்படி போனது என்று கேட்டு டுவீட் செய்துள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் பற்றி நாங்கள் பிளே ஆஃப் சுற்றில் இடம் பெறுவோம் என்று நம்புகிறோம் என்று டுவிட்ட செய்துள்ளனர்.

அதே போல, சி.எஸ்.கே, பஞ்சாப் அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றி விட்டது என்று சி.எஸ்.கே-வுக்கு ஆதரவாகவும் சிலர் டுவிட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Dhoni rejecting ritirement kings xi punjabs exit ipl 2020 netizens reaction to csks win

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X