"அன்புக்கு நான் அடிமை" ஊழியர்கள், ரசிகர்களிடம் அன்பை பரிமாறிய தோனி! மெய்சிலிர்க்க வைத்த தருணம்.

அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது

அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhoni video

dhoni video

dhoni video : அன்புக்கு தோனி அடிமை.. அதுவும் சென்னை ரசிகர்களின் அன்புக்கு சொல்லவே வேண்டாம். ஐபிஎல் தொடரில் சென்னை அணியிக்கு தோனி கேப்டனான நாள் தொடங்கி தற்போது நடைப்பெற்று வரும் 12 ஆவது சீசன் வரை தோனிக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடயே இனம் புரியாத பாச பாலம் இருந்துக் கொண்டே வருகிறது.

Advertisment

அதிலும் சென்னை அணி சேப்பாக்கத்தில் ஆடும் ஆட்டம் என்றால் மொத்த அரங்கமே மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். யெல்லோ ஆர்மி அரங்கத்தை அதிர வைக்கும். தடைகளை மீறி ரசிகர்கள் தோனியை பார்க்க முயற்சிப்பது, தோனி அடிக்கடி தமிழில் பேசி கலக்குவது என ஏகப்பட்ட சுவாரசியங்கள் நிகழ்ந்திருக்கிறது.

நேற்றைய தினம் சேப்பாக்கத்தில் டெல்லி அணிக்கும் சென்னை அணிக்கு நடந்த அனல் யுத்த ஆட்டம் ஐபிஎல் வரலாற்றில் கண்டிப்பாக ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. 80 ரன்கள் வித்யாசத்தில் சென்னை அணி டெல்லி அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகனான தல தோனி அறிவிக்கப்பட்டார். அவர் விருது வாங்க சென்ற போது ஓட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று தோனிக்கு கைதட்டல்களை பரிசாக அளித்தனர்.

தன் மீது ரசிகர்கள் இப்படியொரு மரியாதை வைத்திருப்பதை கண்டு நெகிழ்ந்து போன தோனி தன்னுடன் இருக்கும் சேப்பாக்க அரங்கத்தின் ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பதில் அன்பை வெளிப்படுத்தினார். தோனி மைதானத்தில் இருந்து கொண்டு ரசிகர்களை நோக்கி அவர்களுக்கு பந்தை அன்பாக அளித்தார். அவர் அரங்கத்தை சுற்றி நடந்துக் கொண்டே ரசிகர்களுக்கு மஞ்சள் நிற பந்தை வீசினார். தோனி கையால் தரும் பந்து என்றால் ரசிகர்கள் விடுவார்களா என்ன? நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் பந்தை பிடித்தனர்.

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சி மைதானத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது. அதே போல் சென்னை அணியின் வீரர்கள் ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், ராயுடு, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு டி-சர்ட், சென்னை அணியின் தொப்பி மற்றும் பந்துகளை ரசிகர்களுக்கு பரிசாக அளித்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Social Media Viral Chennai Super Kings

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: