விஜய்க்கு எதிராக இயக்குனர் சாமி சர்ச்சை வீடியோ: ரசிகனுக்கு கைகொடுத்துவிட்டு டெட்டால் போட்டு கை கழுவுகிறார்

Director Samy video released against Vijay: சிந்துசமவெளி உள்ளிட்ட படங்கள் மூலம் சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் சாமி, நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு கை கொடுத்துவிட்டு உள்ளே போய் கழுவுவ்ய்கிறார் என்று விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Director Samy video released against Vijay: சிந்துசமவெளி உள்ளிட்ட படங்கள் மூலம் சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் சாமி, நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு கை கொடுத்துவிட்டு உள்ளே போய் கழுவுவ்ய்கிறார் என்று விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy Vijay 64 First Look Live News

Thalapathy Vijay 64 First Look Live News

Director Samy video released against Vijay: சிந்துசமவெளி உள்ளிட்ட படங்கள் மூலம் சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் சாமி, நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு கை கொடுத்துவிட்டு உள்ளே போய் கழுவுகிறார் என்று விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

நடிகர் விஜய் நடித்த தலைவா படத்திற்குப் பிறகு அவருடைய படங்களின் இசை வெளியீடு, மற்றும் படம் வெளியாகும்போதும் அரசியல் சர்ச்சை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. அண்மையில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேச்சு சர்ச்சையானது.

இந்த சர்ச்சை ஓய்ந்து முடிந்த நிலையில், சிந்துசமவெளி, கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கி சர்ச்சைகளை ஏற்படுத்திய இயக்குனர் சாமி நடிகர் விஜயை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசிவிட்டு, அவர்களிடம் கைகொடுத்துவிட்டு உள்ளே போய் டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள் அதை நானே பார்த்தேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

இயக்குனர் சாமி நடிகர் விஜயின் மேடைப்பேச்சை விமர்சித்து பதிவிட்டுள்ள வீடியோவில், “நாம் 4 முறைதான் சந்தித்துள்ளோம். 3 முறை வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. என்னுடைய பெயர் சாமி. நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். 2000ஆம் ஆண்டில் உங்களை நேரடியாக சந்தித்து ‘அன்றில் பறவைகள்’ என்ற குடும்ப பாங்கான கதையைக் கூறினேன்.

பிரியமானவளே பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்காக 2 மணி நேரம் ஒதுக்கி கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது பிரச்சனை இல்லை.

நீங்கள் ரஜினிகாந்த் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்க. வாய் திறந்து பேசாதீங்க ப்ளீஸ். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கங்கு தான் வைத்திருக்கிறது. நீங்கள் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் சினிமாத்துறை தாண்டி எந்த அளவில் நல்லவர் என்பது தெரியும். ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசிவிட்டு, அவர்களிடம் கைகொடுத்துவிட்டு அதை டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்தேன்.

நீங்கள் எந்தவிதத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாட்கள் நடிக்கிறீர்கள். அதற்கு கருப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். இதில் எங்கே நேர்மை, உண்மை இருக்கிறது. மேடையில் மட்டும் ஏன் பொய்யாக பேசுகிறீர்கள். எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும்.

தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போகவும். வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க. ஒரு நாள் உண்மை வெளியில் வரும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரும் கேவலப்பட வேண்டி வரும். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சாமி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் மீதான இயக்குனர் சாமியின் விமர்சனத்துக்கு விஜய் ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்வினை செய்துவருகின்றனர்.

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: