New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/06/2-49.jpg)
இதயம் பலவீனம் ஆனவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.
தாய்லாந்த்தில் 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பிடம் வசமாக மாட்டிக் கொண்ட நாயை, உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் காப்பாற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாய்லாந்தில் உள்ள தேசிய செய்தி ஊடகம் ஒன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களுக்கு திக் திக் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தது என்ன நடக்குமோ? ஏது ஆகுமோ? என்ற பதற்றத்துடன் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், கிளைமாக்ஸில் வரும் சீசனை பார்த்து கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள்.
கடைசி நேரத்தில் உயிர் தப்பும் நாய், அப்படியும் அதை விடாமல் துரத்தும் மலைபாம்பு, தங்களின் உயிரை பணயம் வைத்து பாம்பிடம் இருந்து நாயை மீட்டு எடுக்கும் இளைஞர்கள் வீடியோவில் தோன்றிய அனைவரும் நம் அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கே அழைத்து சென்றனர். குறிப்பாக மலைபாம்பின் வாயில் மாட்டிக் கொண்ட நாயை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கூடவே நின்று தைரியத்துடன் குரைக்கும் நாய் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இதயம் பலவீனம் ஆனவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும். எதையும் தாங்கும் நெஞ்சம் என்று சொல்வார்கள் தாரளமாக இந்த வீடியோவை பார்க்கலாம.
ஃபேஸ்புக்கில் மட்டும் இந்த வீடியோ இதுவரை மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.