New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/amazon-diwali-special-family-ad.jpg)
மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த வீடியோவை முகநூலில் மட்டும் 43 லட்சம் பார்வையிட்டுள்ளனர்.
Diwali 2021 Amazon Diwali ad : தீபாவளி நெருங்கிக் கொண்டு வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் புத்தாடை உடுத்தி, மன மகிழ்ச்சியுடன் உற்றார் உறவினருடன் நாம் அனைவரும் இந்த நாளை கொண்டாட இருக்கின்றோம். வீட்டில் பலகாரங்கள் எல்லாம் ரெடி ஆகிக் கொண்டிருக்கும் என்று நினைக்கின்றோம்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளியை ஏதோ ஒரு வகையில் மிகவும் மகிழ்ச்சியானதாக நெகிழ்ச்சியானதாக மாற்ற ஏதோ ஒரு தருணம் நம்முடைய வாழ்வில் நிகழ்ந்து விடுகிறது. அந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி நம்மை அழவே வைத்துவிடுகிறார்கள் விளம்பர இயக்குநர்கள்
அமேசான் நிறுவனத்தின் தீபாவளி விளம்பரமும் கிட்டத்தட்ட இப்படியான ஒரு நெகிழ்ச்சியான உணர்ச்சியை தூண்டும் விதமாக தீபாவளி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீ ஜூஸ் குடு, நான் கண்ணாடிய தரேன்… பேரம் பேசும் குரங்கு… வைரல் வீடியோ
Thanks @amazonIN for making such an amazing, wonderful and meaningful message. Diwali is not just a festival it promotes the much needed peace, harmony and brotherhood in the society. It is a Festival that unifies every religion, every home and every heart. #specialfamily https://t.co/QCsQSxFVq3
— Devraj Rajput (@XxSociopathx) October 30, 2021
கார் ஒன்றில் தீபாவளி அன்பளிப்பு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அம்மாவும் மகனும் யாரையோ பார்க்க சென்று கொண்டிருக்கிறனர். மகனோ தீபாவளிக்கு யாராவது அமேசானில் ஆர்டர் செய்து 50 கி.மீ பயணித்து கிஃப்ட் தருவார்களா என்று கேட்கிறார். மேலும் யாரை பார்க்க போகிறோம், என்ன தரப் போகிறோம், யார் அவர் என்று எல்லா விதமான கேள்விகளையும் கேட்கிறார். அப்போது அவரின் அம்மா, இந்த ஏப்ரல் மாதத்தில் உனக்கு உடலுக்கு மிகவும் முடியாமல் போனதல்லவா. அப்போது உனக்கு மருத்துவமனையில் படுக்கை வசதியை உறுதி செய்தவர் இந்த நபர் தான் என்று இந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் இன்னல்களை எடுத்துக் கூறுகிறார்.
மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த வீடியோவை முகநூலில் மட்டும் 43 லட்சம் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு கொரோனா போன்ற இக்கட்டான சூழலில் உங்களுக்கு உதவிய சிறப்பு நண்பர்களுடன் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள் என்று அமேசான் அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு உங்களின் கஷ்டமான காலத்தில், குறிப்பாக கொரோனா காலத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருந்த நபர்களுடன் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.