வீடு சுத்தம் செய்தபோது செட்ஆஃப் பாக்ஸ் அடியில் கிடைத்த ரூ.2 லட்சம்; ஆனாலும் சோகம்; காரணம் இதுதான்!

தீபாவளி பண்டிகைக்காக வீட்டைச் சுத்தம் செய்தபோது டி.டி.எச் செட்-டாப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரூபாய் கிடைத்தது. இதனால், அந்த குடும்பத்தினர் சந்தோஷப்படுவதற்கு பதிலாக சோகமடைந்தனர். இதற்கு காரணம், அவை ஆர்.பி.ஐ-யால் திரும்ப பெறப்பட்ட பழைய ரூ.2,000 நோட்டுகள் என்பதுதான் ஆச்சரியம்.

தீபாவளி பண்டிகைக்காக வீட்டைச் சுத்தம் செய்தபோது டி.டி.எச் செட்-டாப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரூபாய் கிடைத்தது. இதனால், அந்த குடும்பத்தினர் சந்தோஷப்படுவதற்கு பதிலாக சோகமடைந்தனர். இதற்கு காரணம், அவை ஆர்.பி.ஐ-யால் திரும்ப பெறப்பட்ட பழைய ரூ.2,000 நோட்டுகள் என்பதுதான் ஆச்சரியம்.

author-image
WebDesk
New Update
Diwali cleaning Rs 2000 notes 2

ரூ.2,000 நோட்டுகள் 2023-ல் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அதிகாரப்பூர்வமாக புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டன, மேலும், அவற்றைப் பொதுமக்கள் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. Photograph: (Image Source: Reddit)

தீபாவளி பண்டிகைக்காக வீடு சுத்தம் செய்யும்போது ரூ.2 லட்சம் கண்டுபிடித்த குடும்பத்தினர் குறித்த ரெடிட் (Reddit) பதிவு வைரலாகி வருகிறது. இதற்கு, ‘வருங்காலத்தில் பழங்காலப் பொருளாக விற்கலாம்’ நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்போது புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

அடுத்த வாரம் தீபாவளி வரவிருப்பதால், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீடுகளில், வீடுகளை 'ஆண்டுக்கு ஒருமுறை தூய்மைப்படுத்தும் சடங்கு' எனப்படும் 'டீப் கிளீனிங்' என்கிற முழு சுத்தம் செய்யும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு குடும்பத்திற்கு, இந்த ஆண்டு தீபாவளிக்கு வீடு சுத்தம் செய்யும் பணி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ரெடிட் பயனர், தனது தாயார் பழைய டி.டி.எச் செட்-டாப் பெட்டியைச் சுத்தம் செய்தபோது, புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளில் ரூ.2 லட்சம் பணத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்ததாகப் பகிர்ந்துள்ளார்.  “2025-ன் மிகப் பெரிய தீபாவளி சஃபாய் (சுத்தம்)’ என்ற தலைப்பில் அந்தப் பதிவில், அந்தப் பயனர் எழுதியதாவது,  “தீபாவளி பன்டிகைக்காக வீடு சுத்தம் செய்யும்போது, என் அம்மா ரூ.2,000 பழைய நோட்டுகளாக ரூ.2 லட்சம் கண்டுபிடித்தார்... அது, பண மதிப்பிழப்பு காலங்களில் என் அப்பாவால் ஒருவேளை பழைய டி.டி.எச் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். நாங்கள் இன்னும் அவரிடம் சொல்லவில்லை. மேலும், இதை எப்படி மேற்கொண்டு செயல்படுத்துவது என்று தயவுசெய்து ஆலோசனை சொல்லுங்கள்.” என்று கேட்டுள்ளார்.

இந்தப் பதிவில், தற்போது புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்ட ஒரு படமும் இடம்பெற்றிருந்தது. இந்த நோட்டுகள் 2023-ல் இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்.பி.ஐ) அதிகாரப்பூர்வமாக புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டன, மேலும் அவற்றைப் பொதுமக்கள் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது.

Advertisment
Advertisements

பதிவைப் பாருங்கள்:

Biggest diwali Safai of 2025
byu/Rahul_Kumar82 inindiasocial

இந்தப் பதிவு விரைவாகப் பிரபலமடைந்தது. மேலும், பலதரப்பட்ட எதிர்வினைகளைத் தூண்டியது. “அவை புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் இன்னும் சட்டப்படி செல்லுபடியாகும். அவற்றை ரூ.20,000 வரம்புடன் நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்” என்று ஒரு பயனர் எழுதினார்.  “உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களைச் சேகரித்து, அவர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்று பிரித்துக் கொடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரிசர்வ் வங்கிக்குச் சென்று அதை மாற்றிக்கொண்டு, அந்தத் தொகையை அவர்கள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றுங்கள்” என்று மற்றொரு பயனர் ஆலோசனை கூறினார்.

“நான் ஒரு நோட்டு அல்லது இரண்டு நோட்டுகளைச் சேமித்து வைப்பேன்; வருங்காலத்தில் அதை ஒரு பழங்காலப் பொருளாக விற்கலாம். வேறு ஏதாவது செய்ய முடியுமா என்று நீங்கள் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுப் பார்க்கலாம், ஆனால் அது ஒரு பழங்காலப் பொருளாக இருப்பதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது என்று நான் நினைக்கிறேன்” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.

Trending

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: