Advertisment

பிரியாணி இல்லை என்பதற்காக கடை ஓனரை தாக்கிய திமுக பிரமுகர்: கட்சியில் இருந்து நீக்கம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை பிரியாணி சண்டை, திமுக பிரியாணி சண்டை

dmk briyani fight, திமுக பிரியாணி சண்டை

சென்னை பிரியாணி சண்டை : கடையை மூடும் வேளையில் பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை திமுக பிரமுகர் தாக்கிய விவகாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

dmk briyani fight, திமுக பிரியாணி சண்டை திமுக பிரியாணி சண்டை

விருகம்பாக்கம் பகுதியில் செயல்படும் ஒரு உணவகத்திற்கு கடந்த 28ம் தேதி இரவு 10 மணியளவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து தங்களுக்கு பிரியாணி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளனர். அதற்கு கடை ஊழியர், இரவு நேரம் ஆனதால், பிரியாணி தீர்ந்து விட்டதாகவும், கடையை மூடும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார். இவ்வாறு கடை ஊழியர்கள் கூற அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு, அனைவரையும் கடைக்குள் வைத்து ஷட்டரை மூடிச் சென்றது. இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

சென்னை பிரியாணி சண்டை சிசிடிவி ஃபுட்டேஜ்

 

இது தொடர்பாக கடை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளிக்க, விசாரணையில், ஊழியர்களை தாக்கியவர் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் என்பது தெரிய வந்தது.

சென்னை பிரியாணி சண்டை தாக்குதலில் ஈடுபட்ட யுவராஜ்

dmk cadre briyani fight - திமுக பிரியாணி சண்டை

இதனையடுத்து, யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யுவராஜும், அவரின் உடன் வந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

1, 2018

இதைத் தொடர்ந்து, யுவராஜ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Chennai Dmk Cctv Footage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment