கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என, நீதிபதி ஓ.பி.ஷைனி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
திமுக மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே 2ஜி வழக்குதான். அந்த வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டிருப்பது அக்கட்சி வலுப்பெற முதன்மையாக கருதப்படுகிறது. தீர்ப்புக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை முருகன், “இனி திமுகவுக்கு எல்லாமே வெற்றிதான்”, என தெரிவித்தார். அதேபோல், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “2ஜி வழக்கை பூதாகரமாக்கிய ஊடகங்கள், இந்த வெற்றியையும் அதே அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்”, என கூறினார்.
வெகுநாட்கள் கழித்து, திமுக தலைவர் கருணாநிதி, ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’, என அறிக்கை வெளியிட்டார்.
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா விடுதலையானதை பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #DMKtriumphs என்ற ஹேஷ்டேகில் கொண்டாடி வருகின்றனர்.
#DMKtriumphs ???? https://t.co/NNF3r2Iqim
— Unlighted (@idharunraja) 21 December 2017
Discussion between Fake 176000 crores propaganda secretaries and the judge. Sums it up! ????#2GScamVerdict #2GSpectrum #DMKtriumphs #kanimozhi #Raja #DMK #RKNagarElection #VelaikkaranFromTomorrow pic.twitter.com/4YSd5uwOj6
— Annamalai Unique (@AnnzTweetz) 21 December 2017
The way #DMK came out from #2GSpectrum fake lies propaganda case is massive! feel the bgm.. . The name is DMK ???????? #2Gverdict #DMKtriumphs pic.twitter.com/r5XHP9zNBf
— #DMK4TN (@DMK4TN) 21 December 2017
To haters..#DMKtriumphs pic.twitter.com/18Db7IQc1H
— AIவிவசாயி (@Rahul_james95) 21 December 2017
That was a great victory. Chief Minister went prison for corruption, An opposition party wins the Mega Case. Best lawyers brings the Best verdict. #DMKTriumphs #2GVerdict @mkstalin @arivalayam @Udhaystalin pic.twitter.com/nYCcMhWQ2y
— Kuttyaswin ???? ThoonganagaramDFC (@kuttyaswin47) 21 December 2017
2G வழக்கில் ஒரு வாய்தா கூட வாங்காதவர தான் திமுக சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசா.. #dmktriumphs
— Jerry (@jerry_sundar) 21 December 2017
Destiny still arrives ????????????#2GScamVerdict #DMKtriumphs pic.twitter.com/6l0dnOEm0d
— Goku (@Iron_Goku) 21 December 2017
எல்லாருமே திமுகவ வில்லனாவே சித்தரிச்சு தான பாத்திங்க! உண்மையையும், நியாயத்தையும் வென்றெடுத்த திமுகவ இந்த தமிழகம் இனி ஹிரோவா பாக்கும் ???????????????? #2Gverdict #2GSpectrum #DMKtriumphs pic.twitter.com/mdktzDMxE2
— #DMK4TN (@DMK4TN) 21 December 2017
பார்ப்பன & அடிமை அவதூறுகள் என்றுமே வெற்றி பெற்றதில்லை.. ????????#DMKtriumphs pic.twitter.com/FXftqFBGYm
— Marina???? (@Mark2kali) 21 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.