”திமுக வெல்லும்”: ஆ.ராசா, கனிமொழி விடுதலையை இணையத்தில் கொண்டாடும் திமுகவினர்

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என, நீதிபதி ஓ.பி.ஷைனி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என, நீதிபதி ஓ.பி.ஷைனி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

திமுக மீது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே 2ஜி வழக்குதான். அந்த வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டிருப்பது அக்கட்சி வலுப்பெற முதன்மையாக கருதப்படுகிறது. தீர்ப்புக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை முருகன், “இனி திமுகவுக்கு எல்லாமே வெற்றிதான்”, என தெரிவித்தார். அதேபோல், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “2ஜி வழக்கை பூதாகரமாக்கிய ஊடகங்கள், இந்த வெற்றியையும் அதே அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்”, என கூறினார்.

வெகுநாட்கள் கழித்து, திமுக தலைவர் கருணாநிதி, ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’, என அறிக்கை வெளியிட்டார்.

2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா விடுதலையானதை பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #DMKtriumphs என்ற ஹேஷ்டேகில் கொண்டாடி வருகின்றனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk celebrate their victory in 2g case in social websites

Next Story
”எனக்கு உணவு, போர்வை வேண்டும்”: கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு 7 வயது சிறுவன் நெகிழ்ச்சி கடிதம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X