பூசணிக்காய் சுற்றுவது எப்படி? வடமாநில தொழிலாளிக்கு இந்தியில் பாடம் எடுத்த தி.மு.க எம்.எல்.ஏ

பூமி பூஜையின்போது வடமாநில தொழிலாளி ஒருவர் கற்பூரம் ஏற்றி பூசணிக்காயை உடைக்க முற்பட்டபோது, பூசணிக்காயை எப்படி சுற்ற வேண்டும் என பூந்தமல்லி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. இந்தியில் சொல்லிக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
poona mallee

பூமி பூஜையின்போது வடமாநில தொழிலாளி ஒருவருக்கு பூசணிக்காயை எப்படி சுற்ற வேண்டும் என பூந்தமல்லி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. இந்தியில் சொல்லிக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பூமி பூஜையின்போது வடமாநில தொழிலாளி ஒருவர் கற்பூரம் ஏற்றி பூசணிக்காயை உடைக்க முற்பட்டபோது, பூசணிக்காயை எப்படி சுற்ற வேண்டும் என பூந்தமல்லி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. இந்தியில் சொல்லிக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழக அரசியலில் வடக்கு - தெற்கு என்றும் தமிழ் - இந்தி என்றும் எதிர்நிலைகளாக்கி பரபரப்பாக பேசப்படுவது நிகழ்ந்து வருகிறது. அதே போல, மும்மொழிக் கொள்கைக்கு தி.மு.க தலைமையிலான தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தி படித்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேளைக்கு பெரிய எண்ணிக்கையில் வந்து வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் அவர்கள்தான் தமிழ் படிக்க வேண்டும், ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று தி.மு.க மற்றும் தி.மு.க ஆதரவு கூட்டணிகள் 

இந்நிலையில், சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில், வடமாநில தொழிலாளி ஒருவர் பூமி பூஜையின்போது, கற்பூரம் ஏற்றி பூசணிக்காயை உடைக்க முற்பட்டார். 

அப்போது, குறுக்கிட்ட பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. தி.மு.க-வைச் சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி, அந்த வட மாநில தொழிலாளிக்கு பூசணிக்காயை எப்படி சுற்றவேண்டும் இந்தியில் சொல்லிக் கொடுத்து, அதன்படி சுற்ற செய்தார். பூசணிக்காய் சுற்றுவது எப்படி?  வடமாநில தொழிலாளிக்கு தி.மு.க எம்.எல்.ஏ இந்தியில் பாடம் எடுத்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: