இது கனவா ? நிஜமா? பாஜக பெண் அமைச்சர்களுடன் குழந்தை போல் விளையாடும் கனிமொழி!

ஆண் எம்பிக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர்.

பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட பெண் எம்பிக்களுடன் திமுக எம்.பி கனிமொழி குழந்தை போல் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கனிமொழி வைரல் வீடியோ :

நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் இந்தியாவின் அனைத்து மாநில எம்பிக்களும் தவறாமல் கலந்து கொண்டனர். இந்நிலையில் உணவு துறை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது இல்லத்தில் எம்.பிகளுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

சக எம்பிக்களை இந்த விருந்துக்கு அழைத்திருந்தார். இந்த விருந்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருடன் பாஜக நிர்வாகிகளும், திமுக எம்.பி கனிமொழி, மற்ற கட்சிகளை சேர்ந்த பெண் எம்பிக்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர்.

உணவு அருந்திய பின்பு பெண் எம்பிக்கள் அனைவரும் வட்டமிட்டு குழந்தைகளை போல் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக திமுக எம்பி கனிமொழி , மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட மற்ற பெண் எம்பிக்களுடனும் ஒன்றாக கைகோர்த்து நடனமாடியு மகிழ்ந்தார்.

இதனை பிற பெண் எம்பிக்களும், பார்வையாளர்களும் தங்களது செல்போனில் பதிவு செய்தனர்.

வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு கொள்கைகளை கொண்டவராக இருந்தாலும் ஒற்றுமையுடன் பெண் எம்பிக்கள் விளையாடியதை ஆண் எம்பிக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர். அதுமட்டுமில்லை எம்பி என்ற பொறுப்பு, பதவிகளை அடைந்து உயர்ந்துவிட்டாலும், தொலைந்து போன பழைய மழலை நினைவுகளுடன் பெண் எம்பிக்கள் விளையாடும் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவை மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மீண்டும் குழந்தை பருவத்திற்கு சென்ற அழகிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் கனிமொழியின் சீரியஸ் முகங்களை பார்த்த பலருக்கு இந்த வீடியோ ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு எப்படி?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close