தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் ஈடுபடுவோர்களை போலீசார் கைது செய்து வந்தனர். இதே போல் மன்னார்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.
போராட்டத்தில் கைதான திமுக மாணவர் அணியைச் சேர்ந்தவரின் பிறந்தநாளை வடுவூர் காவல்நிலைய போலிசார் கேக் வெட்டிக் கொண்டாடினர். பிறந்த நாள் கொண்டாடிய திமுக பிரமுகருக்கு பெண் காவலர் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். இதன் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
https://www.facebook.com/IETamil/videos/1726850170727171/
இதே போல சிவகங்கை மாவட்டம், பரமக்குடி காவல் நிலையத்தில், பெண் போலீஸ் ஒருவர் ஆண் போலீசுக்கு கேக் ஊட்டிய காட்சி வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/IETamil/videos/1726856414059880/
இணையதளம் முழுவதும் வைரலான இந்த வீடியோ காட்சிகளை பலர் பகிர்ந்து வருகின்றனர்.