New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/EY8Y-06WoAAcmAb.jpg)
Doctor And Nurse Get Married At Hospital Amid COVID-19 Crisis
Doctor And Nurse Get Married At Hospital Amid COVID-19 Crisis
Doctor And Nurse Get Married At Hospital Amid COVID-19 Crisis : கொரோனா வைரஸ் காலத்தில் ஆங்காங்கே ஆன்லைன்களிலும், மாநில எல்லைகளிலும் திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இங்கே கொரோனா வைரஸிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் செவிலியர் ஒருவரை மணந்து கொண்டார். ஆனால் செய்தி அதுவல்ல. அவர்கள் இருவருக்கும் திருமணம் எங்கே நடைபெற்றது தெரியுமா மருத்துவமனையில் இருக்கும் தேவாலயத்தில். இந்த திருமண நிகழ்வு பற்றி தான் உலகமே பேச்சு.
ஜேன் டிப்பிங் (34) என்பவரை அண்ணாலன் நவரத்தினம் (30) என்பவர் மணந்து கொண்டார். இவர்களின் திருமணம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இருக்கும் சூழலை பார்த்தால் டிப்பிங்கின் பெற்றோர்கள் ஐயர்லாந்தில் இருந்தும், நவரத்தினத்தின் பெற்றோர்கள் இலங்கையில் இருந்தும் இங்கிலாந்து வருவது சந்தேகம் தான்.
A doctor and nurse from St Thomas’ who had to cancel their wedding due to the #coronavirus outbreak have got married in the hospital’s historical chapel.
Read about Jann and Annalan’s special day and why it meant so much to them to tie the knot at work https://t.co/ECH4nJuBSo pic.twitter.com/tz6T0jj2Bi
— Guy's and St Thomas' (@GSTTnhs) May 26, 2020
அதனால் அவர்கள் ஏப்ரல் மாத இறுதியில் லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த மணநிகழ்வை ஆன்லைனில் கண்டு களித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
ஆம்புலன்ஸ் எமெர்ஜென்ஸி நர்ஸாக இருக்கும் டிப்பிங் “இது தொடர்பாக நாங்கள், தேவாலய நிர்வாகத்திடம் கேட்டோம், ப்ரைவேட் மேரேஜ் செரமாணி இங்கே நடத்த முடியுமா என்று? அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு, அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது என்கிக்றார். 1800களின் பிற்பாதியில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில், ஏப்ரல் 24ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆனாலும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.