2வது மாடியிலிருந்து விழுந்த நாய்!!! சம்பவ இடத்தில் மயங்கிய பெண்

சீனாவில் 2வது மாடியில் இருந்து விழுந்த நாயால் சம்பவைடத்திலேயே இளம்பெண் மயங்கி விழுந்த காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

“நாயா பேயா மழை பெய்யுது” என்ற வாக்கியத்தைக் கேட்டது உண்டு. ஆனால் நிஜத்திலேயே அப்படி நிகழ்ந்தால் என்ன ஆகும்? அது போன்ற ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்தது.

சீனாவின் கௌங்சௌஸ் பையும் என்ற மாநிலத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வாசலில் நிற்கும் பெண் மீது, எங்கிருந்தோ திடீரென நாய் ஒன்று விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அப்பெண் மயங்கி விழுந்தார். 2வது தளத்தில் இருந்து குதித்த நாய் பெண் மீது விழுந்து பிறகு தரையில் விழுந்தது. மேலே விழுந்த அடுத்த நொடியிலேயே மயங்கி விழுந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்த இளப்பெண்ணிற்கு கழுத்து பகுதியில் எலும்பு முரிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தது.

இந்தக் காட்சியை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவு செய்தது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வளம் வருகிறது.

Woman knocked unconscious after dog falls on her

Woman knocked unconscious after dog falls from the sky onto her head???? //shst.me/g22

Posted by Shanghaiist on 26 एप्रिल 2018

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close