சிங்கம்னா பயந்துடுவாங்களா? ஜோடி சிங்கங்களை சிதற விட்ட நாய்: வைரல் வீடியோ - Dog fights with Two Lions video goes viral | Indian Express Tamil

சிங்கம்னா பயந்துடுவாங்களா? ஜோடி சிங்கங்களை சிதற விட்ட நாய்: வைரல் வீடியோ

வன விலங்குகளில் சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற விலங்குகள் எல்லாம் பீதி அடையும். சிங்கம் என்றால் வன விலங்குகள் பயப்படலாம், ஆனால், யாருக்கும் பயப்படமாட்டேன் என ஒரு நாய் ஜோடி சிங்கங்களை சிதற விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

viral video, Dog fights with Two Lions, A Dog fights with Lion, viral video, சிங்கத்துடன் சண்டையிடும் நாய், வைரல் வீடியோ

வன விலங்குகளில் சிங்கத்தைப் பார்த்தாலே மற்ற விலங்குகள் எல்லாம் பீதி அடையும். சிங்கம் என்றால் வன விலங்குகள் பயப்படலாம், ஆனால், யாருக்கும் பயப்படமாட்டேன் என ஒரு நாய் ஜோடி சிங்கங்களை சிதற விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சிங்கம் என்றாலே கம்பீரம், வலிமை, அதன் தடுக்க முடியாத தப்பிக்க முடியாத தாக்குதல். சிங்கம் வன விலங்குகளில் வேட்டையாடும் எல்லா விலங்குகளையும் வீழ்த்தக் கூடியது. இதனால் தான், மனிதர்கள் கதைகளில் சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்று கூறுகிறார்கள்.

புலி, சிறுத்தை, ஜாகுவார், கரடி, யானை எல்லா விலங்குகளையும் தோற்கடிக்கும் வலிமை கொண்டது சிங்கம். ஆனால், ஒன்றல்ல இரண்டு சிங்கங்களை ஒரு நாய் சிதற விட்டிருக்கிறது. அதைவிட அந்த சிங்கங்களும் நாய் மூர்க்கமாக குறைத்துக் கொண்டு முன்னேறி வர பின் வாங்குவதைப் பார்க்கும் எவரையும் வியக்க வைக்கிறது. ஜோடி சிங்கங்கள் உடன் ஒரு நாய் மோதும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு புல்வெளியில், ஒரு ஆண் சிங்கமும் ஒரு பெண் சிங்கமும் ஜோடியாக இருக்கின்றன. தூரத்தில் ஆடுகள், மான்கள், வரிக்குதிரைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. திடீரென ஒரு நாய் சத்தமாக குறைத்துக்கொண்டு மூர்க்கமாக சிங்கத்தை நோக்கி சண்டை போட முன்னேறுகிறது. பதிலுக்கு சிங்கங்கள் தாக்கும் என்று எதிர்பார்த்தால், சிங்கங்கள் பின்வாங்குகின்றன. ஆனால், அந்த நாய் விடாமல் சிங்கங்களை விரட்டுகிறது.

இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் சிங்கங்களை விரட்டும் நாயைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும், சிங்கங்கள் பின்வாங்குவதைக் குறிப்பிட்டு, நாயை பாவம் பிழைச்சுப் போ என்று அமைதியாக விட்டுச் செல்வதாக உள்ளது. ஆனாலும், சிங்கங்களையே விரட்டும் இந்த நாயிக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்தான் என்று கூறிவருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Dog fights with two lions video goes viral