ஆண்களே வேண்டாம்! வெறுத்து போய் வளர்ப்பு நாயை திருமணம் செய்துக் கொண்ட அழகி.

அதிக ஏமாற்றத்துடன் இருக்கும் சமயங்களில் லோகன் தான் எனக்கு ஆறுதல் தரும்.

By: Updated: August 1, 2019, 12:39:01 PM

dog marriage funny video : இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் நாயை திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்டுத்தி இருந்தது. இந்நிலையில் அவர் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வளர்ப்பு நாயை அனைவரின் முன்னிலையிலும் கரம் பிடித்தார்.

இங்கிலாந்தின் கிழக்கு பெர்க்ஷயரில் உள்ள அஸ்காட் நகரில் வசிக்கும் 49 வயதான எலிசபெத் ஹோட் மாடல் அழகி ஆவர். இவர், ஆகஸ்ட் மாதம் தனது செல்லப்பிராணியான லோகன் என்ற நாயை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்தார். தனது வாழ்நாளில் பல ஆண்களால் ஏமாற்றங்களை சந்தித்த விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

எலிசபெத், பலரை சந்தித்தாலும் வாழ்நாளின் இறுதிவரை பயணிக்க ஒரு நல்ல காதலனை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தனது வளர்ப்பு நாயையே திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறினார். அவரின் முடிவு குடும்பத்தார் உடப்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து எலிசெபத் கூறியதாவது, இதற்கு முன்னர் நான் 220-க்கும் அதிகமான ஆண்களுடன் பழகியுள்ளே. டேட்டிங் செய்துள்ளேன். அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. எனக்கு இரண்டு முறை திருமணம் நிச்சயிக்கப்பட்டு ரத்தானது.

அதோடு ஆண்கள் யாரும் உறுதுணையாக இருந்தது இல்லை. எனவே நான் அவர்களை நம்புவதும் இல்லை. அதனால் தற்போது ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ஆகஸ்ட் 2, 2018ம் ஆண்டு நான் ஒரு நாயை தத்தெடுத்து வளர்த்தேன். அதற்கு லோகன் என பெயரிட்டேன். நான் அதிக ஏமாற்றத்துடன் இருக்கும் சமயங்களில் லோகன் தான் எனக்கு ஆறுதல் தரும்.

அதனால் லோகனையே வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்ய இருக்கிறேன்” என அறிவித்தார். எலிசெபத்தின் இந்த முடிவு அவரின் உறவினர்களுக்கு துளியும் உடன்பாடு இல்லை. இருந்த போதும் வேறு வழியின்றி இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதன்படி, மாடல் அழகியான எலிசெபத் தனது லோகனை, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருமணம் செய்துக் கொண்டார். இந்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வழக்கம் போல் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Dog marriage funny video uk woman marries her dog video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X