New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/man-chase-to-bring-dog-inside.jpg)
உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல பிராணியும் இப்படித்தான் உங்களை வாட்டி வதைக்கின்றதா என்பதை எங்களுக்கு நீங்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
என்னைக்குமே நமக்கு ரொம்ப நல்ல நண்பனா ஒரு ஜீவனால இருக்க முடியும்னா அது நிச்சயமா நாயா தான் இருக்க முடியும். நம்முடைய உணர்வுகளை நம் வீட்டு செல்லப் பிராணிகள் புரிந்து கொள்வது போல் வேறு யாராலும் புரிந்து கொள்ளவும் முடியாது. செல்லப் பிராணிகளுடன் நாம் செலவிடும் நேரம் என்பது தான் மிகவும் உன்னதமானதுனு சொன்னா யாராச்சும் மறுக்க முடியுமா என்ன?
இங்க ஒருத்தர் தன் நாயோடு செலவிடும் நேரத்தை பாருங்கள். அலபாமாவில் வசிக்கும் டைலர் ரீட் என்பவர் தான் வளர்த்து வரும் வில்சன் என்ற ஹஸ்கி ப்ளூ மெர்லே இன நாயை வெளியே செல்ல கொஞ்ச நேரம் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் வில்சனுக்கு வெளியே இருந்த காலநிலை பிடித்து போக அவன் அங்கேயே இருந்துவிட்டான். கொட்டும் பனிமழையில் அக்கம் பக்கத்தினர், நாயை இப்படியா விட்டு செல்வது என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அவனை நான் வீட்டுக்குள் கொண்டு வருவதற்குள் என் ஜீவனே போய்விட்டது என்று முகநூலில் பதிவிட்டு உள்ளார்.
மரங்களுக்கு நடுவே வில்சன் இங்கும் அங்குமாய் டெய்லரின் பேச்சை கேட்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சில நேரத்தில் டெய்லர் மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார். சில நேரத்தில் வில்சனிடம் மன்றாடியே கேட்டுவிடுகிறார்.இருந்தாலும் வில்சன் மனம் இறங்கவில்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. இந்த வீடியோவை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல பிராணியும் இப்படித்தான் உங்களை வாட்டி வதைக்கின்றதா என்பதை எங்களுக்கு நீங்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.