எகிப்தில் உள்ள கிசா பெரிய பிரமிட்டின் உச்சிக்கு ஏறிய நாய் ஒன்று பறவைகளைத் துரத்துவதை பாராமோட்டரிஸ்ட் அலெக்ஸ் லாங் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரமிட்டில் ஏறுவது தடைசெய்யப்பட்டிருப்பதால், நாய் ஒன்று பிரமிட்டில் ஏறிய வீடியோ சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் இடையே வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பிரமிட்டில் ஏறிய நாயின் சாதனை என சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சில நெட்டிசன்கள், பிரமிட்டில் ஏறிய நாயை, பிரமிட்டின் 'புதிய மன்னர்' என்று கிண்டல் செய்து கம்மெண்ட் செய்துள்ளனர்.
கிசா கிரேட் பிரமிட்டின் மேல் நாய் ஒன்று அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாராசூட்டில் பறக்கும் வீரர் பாராமோட்டரிஸ்ட் அலெக்ஸ் லாங், சின்னச் சின்ன பிரமிடுகளுக்கு மேல் பறக்கும்போது பதிவு செய்த இந்த வீடியோ, பழங்கால பிரமிட் கட்டமைப்பின் உச்சியில் ஒரு நாய் இருப்பதைக் காட்டுகிறது. இந்த அசாதாரண நிகழ்வு எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பின்னர் வேகமாக வைரலானது.
பிரமிட்டின் உச்சிக்கு ஏறிய நாய் ஒன்று பறவைகளைத் துரத்திக்கொண்டிருந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் காரணமாக பிரமிடில் ஏறுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதால், பல பயனர்கள் நாய் எப்படி பிரமிட்டில் ஏறியிருக்கும் என்று குழப்பம் தெரிவித்துள்ளனர்.
நாய் ஒன்று பிரமிட்டின் உச்சியில் ஏறி நின்றிருக்கும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த நாய் எப்படி 450 அடி உயரம் கொண்ட பிரமிட்டில் ஏறியிருக்கும் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். சில நெட்டிசன்கள் பிரமிட்டின் புதிய மன்னர் என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர்.
பாராமோட்டரிஸ்ட் அலெக்ஸ் லாங் பகிர்ந்த வீடியோவில், கிசா பிரமிடுகளுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும்போது, அவர் எதிர்பாராத விதமாக, பிரமிடின் உச்சியில் உச்சியில் சில அசைவுகளை அவர் கவனித்தார். உடனடியாக அதை பதிவு செய்துள்ளார். 450 அடி உயர பிரமிட்டின் உச்சியில் ஒரு நாய் பறவைகளை துரத்திக் கொண்டிருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
NEW: Dog spotted hanging out on the top of the Great Pyramid of Giza in Egypt.
— Collin Rugg (@CollinRugg) October 16, 2024
The man who filmed the incident from his powered paraglider says the dog was barking at birds.
The Great Pyramid of Giza is a whopping 450 feet tall meaning the dog had to take a long hike to… pic.twitter.com/flxq9oxgiQ
ஒரு எக்ஸ் பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “எகிப்தில் உள்ள கிசா பிரமிட்டின் உச்சியில் நாய் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தை தனது பாராகிளைடரில் இருந்து படம்பிடித்த நபர், நாய் பறவைகளைப் பார்த்து குரைப்பதாகக் கூறுகிறார். கிசாவின் பெரிய பிரமிட் 450 அடி உயரம் கொண்டது. அதாவது நாய் உச்சிக்கு ஏறியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிசா பெரிய பிரமிட்: உலக அதிசயம்
புராதன உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரிய பிரமிடு, ஆச்சரியத்தையும் சூழ்ச்சியையும் தொடர்கிறது. கிமு 2560-ல் பார்வோன் குஃபுவின் ஆட்சியின் போது கட்டப்பட்டது, இது கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளில் மிகப்பெரியது. 449.5 அடி உயரத்தில் நிற்கும் இந்த பிரமிடு பண்டைய பொறியியல் அற்புதங்களின் அடையாளமாக உள்ளது. இன்று, இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடமாக உள்ளது. இது தொடர்ச்சியான மறுசீரமைப்பு முயற்சிகள் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.