Advertisment

“அரைக்கிலோ டோலோ 650 கொடுங்கங்க” - ட்விட்டரை அதகளப்படுத்தும் மீம்ஸ்

கொரோனா மூன்றாம் அலையின் போது டோலோ 650க்கு கிடைத்த புது மவுசை வைத்து ட்விட்டரில் இந்த மருந்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்

author-image
WebDesk
New Update
Dolo 650 viral memes Dolo fever strikes memers

Dolo 650 viral memes Dolo fever strikes memers : இந்த கொரோனா காலத்துல நாம என்னென்ன புது வார்த்தைகள் கத்துக்கிட்டோம்னு கேட்டா குவாரண்டைன், லாக்டவுன், பேண்டமிக், என் 95, சேஃப் பபுள், சோசியல் டிஸ்டன்ஸிங்ன்னு அடிக்கிட்டே போலாம். முதல் அலைல ஒரு சில வார்த்தைகள் முக்கியமா இருந்திருக்கும், இரண்டாம் அலைல மேலும் சில வார்த்தைகள் சேர்ந்திருக்கும். மூன்றாம் அலை இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலைன்னாலும் ஏதாவது புதுசா கத்துக்க இருக்கும். இடைப்பட்ட காலத்துல டோலோ 650 என்ற பெயர் ஃபேமஸாகவும் அதே நேரத்தில் வீட்டில் பயன்படுத்தும் முக்கிய, அன்றாட தேவைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டதை நாம் உணர்ந்திருப்போம்.

Advertisment

தற்போது இந்தியாவின் நோய்கால நொறுக்குத்தீனியாக வளம் வரும் டோலோ 650-ஐ வைத்து சம்பவம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒன்றரை லட்சத்துக்கு ஆன்லைனில் ஆர்டர்… சிறுவனின் சேட்டையால் நொந்துபோன பெற்றோர்

கொரோனா மூன்றாம் அலையில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் தொற்றுகளில் முக்கியமானது உடல்வலி மற்றும் காய்ச்சல் போன்றவை. டோலோ 650 சிறந்த வலி நிவாரணியாக இருப்பதோடு மட்டுமின்றி காய்ச்சலை குறைக்கவும் உதவுகிறது என்பதால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடி ரூவா குடுத்தாலும் 6 மணிக்கு மேல வேல பாக்கமாட்டேன் – பயணிகளை தவிக்க வைத்த பைலட்

ஆனாலும் கூட அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவது தேவையற்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். மருத்துவர்கள் எழுதிக் கொடுத்தால் மட்டுமே இந்த மாத்திரைகளை பயன்படுத்தவும். அளவுக்கு அதிகமாக டோலோவை உட்கொள்ளும் போது கல்லீரல் பிரச்சனை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment