New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/baby-dominos-named.jpg)
குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் அந்த விளம்பரத்தை கண்டோம் என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
Dominos promises Australian couple free pizza for 60 years : ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் டோமினோஸ் பீட்சா நிறுவனம் சமீபத்தில் போட்டி ஒன்றை வைத்தது. அதில் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு டொமினிக் என்ற பெயரை வைக்கும் பெற்றோர்களுக்கு அடுத்த 60 ஆண்டுகளுக்கு இலவசமாக பீட்சா வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்த போட்டியில் பங்கேற்க குழந்தை டிசம்பர் 9ம் தேதி, 2020 அன்று ஆஸ்திரேலியாவில் பிறந்திருக்க வேண்டும். அன்று தான் டோமினோஸ் நிறுவனம் தங்களின் 60வது ஆண்டுவிழாவை கொண்டாடியது.
சிட்னியில் இருக்கும் க்ளெமெண்டைன் ஓல்ட்ஃபீல்ட் மற்றும் அந்தோனி லாட் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர். போட்டி துவங்கி சில மணி நேரத்திலேயே பிறந்த அவர்களின் முதல் ஆண் குழந்தைக்கு டொமினிக் என்ற பெயரை சூட்டியுள்ளனர்.
வெற்றியாளர்களை அறிவித்த அந்த நிறுவனம், அந்த பெற்றோர்கள் மாதத்திற்கு 14 டாலர்கள் பெருமானம் கொண்ட பீட்சாக்களை இலவசமாக பெறுவார்கள் என்று கூறியது. அடுத்த 60 வருடத்திற்கு இலவச பீட்சாக்களுக்கு ஆகும் செலவு 10,080 டாலர்கள் ஆகும்.
ஏற்கனவே தங்களின் குழந்தைக்கு டொமினிக் என்று தான் பெயர் சூட்ட விரும்பி இருந்தோம். குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் அந்த விளம்பரத்தை கண்டோம் என்று குழந்தையின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தை சில நாட்களுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டியது. ஆனால் 72 மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பிறகு டிசம்பர் 9, அதிகாலை 1.47 மணிக்கு அந்த குழந்தை பிறந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.