/indian-express-tamil/media/media_files/2025/06/19/doomsday-fish-oarfish-2025-06-19-09-31-49.jpg)
இந்த மீன்கள் நீண்ட, நாடா போன்ற வெள்ளி நிற உடலையும், முதுகு முழுவதும் சிவப்பு நிற துடுப்பையும், தலைப்பகுதியில் தனித்துவமான சிவப்பு நிறத்தையும் கொண்டவை. Photograph: (Representative image/Pinterest)
கடலின் ஆழமான பகுதிகளில் வாழும் துடுப்பு மீன்கள் (Oarfish), இந்த ஆண்டு உலகின் பல்வேறு கடற்கரைகளில் நான்கு முறை அரிதாகக் காணப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த மீன்கள் நீண்ட, நாடா போன்ற வெள்ளி நிற உடலையும், முதுகு முழுவதும் சிவப்பு நிற துடுப்பையும், தலைப்பகுதியில் தனித்துவமான சிவப்பு நிறத்தையும் கொண்டவை.
உலகம் அழியப்போற மீன்: ஒரு கெட்ட சகுனமா?
பல கலாச்சாரங்களில், துடுப்பு மீன்களைப் பார்ப்பது கெட்ட சகுணமாகவும், குறிப்பாக சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் மீனவர்களால் ஒரு துடுப்பு மீன் பிடிக்கப்பட்டது. இது ஒரு கெட்ட சகுனம் என்று கருதப்படுவதால், இது பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. பிடிக்கப்பட்ட மீன் சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மீன் 38 மீட்டர் வரை வளரக்கூடியது, இது பூமியில் உள்ள நீளமான எலும்பு மீன் ஆகும்.
சமீபத்தில் கிடைத்த துடுப்பு மீன்
ஜூன் 2ம் தேதி, மூன்று மீட்டர் நீளமுள்ள துடுப்பு மீன் ஒன்று டாஸ்மேனியாவின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியது. அதே வாரத்தில், நியூசிலாந்தில் இரண்டு தனித்தனி துடுப்பு மீன் சைட்டிங்ஸ் பதிவாகின. பிப்ரவரியில், மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா சுர் கடற்கரைக்கு அருகில் ஒரு அரிய வகை மீன் நீந்துவதை கடற்கரைக்கு வந்தவர்கள் கண்டனர். அக்கு வெதர் (AccuWeather) குறிப்பிட்டுள்ளபடி, அந்த மீன் மீண்டும் மீண்டும் கரைக்குத் திரும்பியுள்ளது.
🚨 MYSTERIOUS ‘Doomsday Fish’ appeared in Tamil Nadu a few days back. pic.twitter.com/c3lCrFCPjG
— Times Algebra (@TimesAlgebraIND) June 16, 2025
துடுப்பு மீன் ஏன் 'உலக அழிவின் மீன்' என்று அழைக்கப்படுகிறது?
பல கலாச்சாரங்களில், துடுப்பு மீன்களைப் பார்ப்பது ஒரு கெட்ட சகுணமாகவும், குறிப்பாக சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளையும் ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த அரிய உயிரினங்கள் "ரியுகு நோ சுகாய்" (ryugu no tsukai) என்று அழைக்கப்படுகின்றன, அதாவது "கடல் கடவுளின் அரண்மனையிலிருந்து வந்த தூதுவர்" என்று பொருள். "வடனோஹாரா அண்ட் தி கிரேட் ப்ளூ சீ (Wadanohara and the Great Blue Sea)", "நாமியுச்சிகியுவா நோ முரோமி-சான் (Namiuchigiwa no Muromi-san)" மற்றும் "டௌஹௌ ப்ராஜெக்ட் (Touhou Project)" உள்ளிட்ட பல அனிம்களில் துடுப்பு மீன்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
துடுப்பு மீன்களுக்கும் பேரழிவுகளுக்கும் இடையிலான நவீன கால நம்பிக்கை மங்கிவிட்டாலும், இந்தியா உட்பட பல நாடுகளில் சமீபத்தில் துடுப்பு மீன் பார்க்கும்போது மீண்டும் இந்த பயத்தை எழுப்பியுள்ளன. 2010-ல், ஜப்பானின் கடற்கரையில் பல இறந்த துடுப்பு மீன்கள் கரை ஒதுங்கின. சில மாதங்களுக்குப் பிறகு, 2011-ல் ஏற்பட்ட மிகக் கடுமையான டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அந்த நாடு பாதிக்கப்பட்டது, இது புகுஷிமா அணுசக்தி பேரழிவைத் தூண்டியது.
கட்டுக்கதை Vs அறிவியல்
துடுப்பு மீன்களின் தோற்றத்திற்கும், பல ஆண்டுகளாக நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளுக்கும் இடையே உள்ள தற்செயலான நிகழ்வுகள் இருந்தபோதிலும், துடுப்பு மீன்களைப் பார்ப்பது சோகத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. சிலர் ஒரு சாத்தியமான தொடர்பைப் பற்றி ஊகித்தாலும், மீன்கள் பூகம்ப செயல்பாட்டிற்கு அசாதாரண உணர்திறன் கொண்டிருக்கலாம் என்று கூறினாலும், இது எவ்வாறு அல்லது ஏன் நிகழும் என்பதை விளக்கும் நம்பகமான அறிவியல் கோட்பாடு எதுவும் இல்லை என்று ஹவ் ஸ்டஃப் வொர்க்ஸ் (How Stuff Works) தெரிவித்துள்ளது.
"புல்லட்டின் ஆஃப் தி சீஸ்மோலாஜிகல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா (Bulletin of the Seismological Society of America)"-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, துடுப்பு மீன் சைட்டிங்ஸ் மற்றும் பூகம்பங்களுக்கு இடையே எந்த குறிப்பிடத்தக்க தொடர்பும் கண்டறியப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.