Advertisment

தோசை மாவு எப்போது தோசை பேட்ஸ்மேன் ஆனது? இந்(தி)த மொழி பெயர்ப்புக்கு யார் தான் காரணம்?

ஒரு மொழியை அறியும் திறன் இருந்தும், அது யாருக்கும் உதவாமல் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை கேலி கூத்தாய் மாற்றியது தான் மிச்சம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dosa Ballebaaz Blunder On Dosa Batter Packet Has Netizens Amused

Dosa Ballebaaz Blunder On Dosa Batter Packet Has Netizens Amused

Dosa Ballebaaz Blunder On Dosa Batter Packet Has Netizens Amused : இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட, பல்வேறு மொழிகள் பேசும் மக்களை கொண்ட நாடு. ஒரு மொழி பேசும் நபர்களை, மற்றொரு மொழியை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கட்டாயம் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.  தங்களின் மொழியை காத்துக் கொள்வதற்காக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் கண் முன்னே வரலாறாக இருக்கிறது.

Advertisment

ஆனாலும் தொழில் நோக்கில் ஒரு பொருளை சந்தைப்படுத்தும் போது அனைத்து பிரிவினருக்கும் புரியும் வகையில் இரண்டு அல்லது மூன்று மொழிகளில் விளம்பரம் செய்வதும் வாடிக்கையான ஒன்று தான். சில நேரங்களில் தவறுகள் நடக்கத்தான் செய்கிறது. இதற்கு காரணம் அந்த உற்பத்தியாளரின் தவறு அல்ல. அது கூகுள் ட்ரான்ஸ்லேட்டரும் சரி வர ஞானம் இல்லாதவர்கள் உதவி என்று முன்வந்து செய்யும் “அறச்செயல்” தான்.

இதற்கான அடையாளத்தை தான் நாம் ஏற்கனவே “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியில்” பார்த்தோம். இதே போன்ற ஒரு தவறு தான் தற்போது சமூக வலைதளங்களில் மேற்கோள்காட்டப்பட்டு வருகிறது. இட்லி தோசை மாவு விற்கும் நிறுவனம் ஒன்று நான்கு மொழிகளில், மாவு பாக்கெட்டின் மேற்புறத்தில் விளம்பரம் செய்துள்ளது. அதில் ”தோசா பெல்லிபாஸ்”  என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியில் பெல்லிபாஸ் என்றால் ”பேட்ஸ்மேன்”  என்று அர்த்தமாம்.

மேலும் படிக்க : ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” : கொரோனாவையும் தோற்கடிக்கும் பேத்தியின் பாசம்!

இதனை பார்த்த பலரும், சிரிப்பை தாண்டியும் பல்வேறு அரசியல் குறித்தும், மொழியை வைத்து நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் தேவையற்ற பலதையும் பேசி வருகிறார்கள். இந்த மாவு பாக்கெட்டை வாங்கி, அதில் இருக்கும் பிழையை கண்டு, ஊரில் இருக்கும் பலருக்கும் கேலி பொருளாய் மாற்றியதற்கு பதிலாய், அந்த உற்பத்தி நிறுவனத்திற்கு உதவியிருக்கலாம். ஒரு மொழியை அறியும் திறன் இருந்தும், அது யாருக்கும் உதவாமல் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை கேலி கூத்தாய் மாற்றியது தான் மிச்சம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Hindi Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment