அப்துல்கலாமிற்காக தமிழர்கள் செய்த செயலை கண்டு சிலிர்த்த முகமது கைப்!

பார்ப்பதற்கே அவ்வளவு பெருமையாக உள்ளது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு கோவிலில் சிலை வைத்த ராமேஸ்வர மக்களின் செயலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் வியந்து பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி விண்வெளி விஞ்ஞானியாக திகழ்ந்த டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு மிகவும் பிடித்தமான தலைவர். ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று பலருக்கும் ரோல் மாடலாக உயர்ந்தார்.

மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி என்பது எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பதை தனது எழுத்தாளும், பேச்சாலும் பல இடங்களில் உணர்த்தியவர். இவரின் இறப்பு அனைத்து தரப்பினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.குறிப்பாக மாணவர்கள் பலர் அப்துல்கலாமின் இறப்பை எண்ணி கண்ணீர் விட்டு அழுதனர்.

அப்துல்கலாமிற்கு அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பல இடங்களில் சிலை வைக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் முதன்முறையாக ராமேஸ்வரத்தில் உள்ள கோயில் அப்துல்கலாமின் வடிவத்தில் சிலை செய்துக்கப்பட்டு கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் சிலிர்புடன் பதிவிட்டுள்ளார். அதில் “ கோவிலில் அப்துல்கலாமிற்கு சிலை வைத்துள்ளனர் ராமேஸ்வர மக்கள். இதை பார்ப்பதற்கே அவ்வளவு பெருமையாக உள்ளது. உண்மையான ஹிரோ அவர். அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடியவர்” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close