Advertisment

கெட்டவங்களுக்கு குழந்தை பிறக்காது': இணையத்தை அதிரவைத்த டாக்டர் ஷர்மிகா

சித்தா மருத்துவர் ஷர்மிகா உணவு மற்றும் மருத்துவம் தொடர்பாக பேசிய கருத்துகளில் உண்மை தன்மையில்லை என்றும் அவர் பேசியதை விமர்சித்து நெடிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
Jan 05, 2023 14:11 IST
கெட்டவங்களுக்கு குழந்தை பிறக்காது': இணையத்தை அதிரவைத்த டாக்டர் ஷர்மிகா

சித்தா மருத்துவர் ஷர்மிகா உணவு மற்றும் மருத்துவம் தொடர்பாக பேசிய கருத்துகளில் உண்மை தன்மையில்லை என்றும்  அவர் பேசியதை விமர்சித்து நெடிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

உடல் ஆரோக்கியம் சமந்தமாக பல்வேறு செய்திகள் மற்றும் யுடியூப் வீடியோக்கள் அதிகமாக வெளியாகும் சூழல் தற்போது உள்ளது. குறிப்பாக சருமத்தின் பொலிவுக்கு என்ன சாப்பிட வேண்டும். உடை எடை குறைய என்ன செய்ய வேண்டும். எந்த செய்தால் குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகிறது. கிட்டதட்ட இந்த வீடியோக்களுக்கு கிடைக்கும் ஆதரவு வர்த்தகரீதியாக அதிக முதலீட்டை யுடியூப் சேனலுக்கு ஈட்டி தருகிறது

இந்நிலையில் தமிழக பாஜக சிறுபான்மையினர் தலைவர் டெய்சியின் மகளான சித்த மருத்துவர் ஷர்மிகா பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார்.  குறிப்பாக குழந்தை பெற்று கொள்வதற்கு உடல்  உறவு என்பது முக்கியமில்லை. அது கடவுளின் அருளால் நடக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் கெட்டவர்களுக்கு குழந்தை பிறப்பு இல்லாது போகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பெண்களின் மார்பகம் பெரிதாக மாற நொங்கு சாப்பிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். பெண்களின் மார்பகம் பெரிதாக இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தால் பல பெண்கள் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறார்கள் என்றும் இதுபோன்ற கருத்துக்கள் பெண்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மனிதர்களைவிட பெரிதான மிருகமான மாட்டை சாப்பிடக்கூடாது என்றுஅவர் கூறியுள்ளார். மாட்டு கறி என்பது குறைந்த விலையில் கிடைக்கும் புரத சத்து நிறைந்த உணவு . இதை கூட மக்கள் சாப்பிடக் கூடாது என்றால் புரத சத்துக்கு எங்கே போவார்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சோப்பில் கெமிகல்ஸ் இருப்பதால்  அதை பயன்படுத்த  வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் சோப்-யை பயன்படுத்தி கை கழுவ வேண்டும் என்று கூறப்பட்டது. சோப் பயன்படுத்துவதால் மட்டுமே கிருமிகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சோப் பயன்படுத்த கூடாது என்று ஷர்மிகா கூறுவது சரியா? என மருத்துவ வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment