டாக்டர் ஷர்மிகாதான் இப்போது மீம் கிரியேட்டர்களின் கண்டெண்ட் ஆகியிருக்கிறார். யார் இந்த டாக்டர் ஷர்மிகா, அப்படி என்ன பேசினார் என்றால், அவர் கடவுள் நினைச்சாதான் குழந்தை பிறக்கும் என்று கூறியதை வைத்து இணையத்தில் டாக்டர் ஷர்மிகா மீம்ஸ் கலக்கி வருகிறது.
பா.ஜ.க-வை சேர்ந்த டெய்சியின் மகள்தான் இந்த சித்த மருத்துவர் ஷர்மிகா. இவர் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சித்த மருத்துவரான ஷர்மிகாவிடம் யூடியூப் சேனல்கள் மருத்துவம் தொடர்பாக பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், டாக்டர் ஷர்மிகா அண்மையில் அளித்த பேட்டியில், இந்தியர்கள் தங்களைவிட பெரிய விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டால், செரிமானம் ஆகாது. மாட்டை கடவுளாக வணங்குகிறோம் அதை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.
அதுமட்டுமில்லாமல், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும் என்றும் பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். டாக்டர் ஷர்மிகாவின் இதுபோன்ற, அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைக் கண்டித்து பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
டாக்டர் ஷர்மிகா மற்றொரு நேர்காணில், குழந்தையின்மை பிரச்னை குறித்து பேசுகையில், “குழந்தை பிறப்பதற்கு கடவுள்தான் மனசு வைக்க வேண்டும். உடலுறவு வைத்துக்கொள்வது, உடல்நலக் குறைபாடு போன்றவை எல்லாம் இரண்டாம் தர காரணங்கள்தான். முதல் காரணம் என்பது இயற்கை உங்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பை தர வேண்டும். இயற்கை ஒத்துழைக்க வேண்டும் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். ஒருவர் செய்த தீமையான விசயங்களால் வாரிசு இருக்கக்கூடாது என்று நினைத்தால் இருக்காது. ஆனால், ஒரு நல்ல மனுசன், எந்த பிரச்சனை இல்லை என்றால் அடுத்தடுத்த மாசம் கிடைக்கும்” என்று கூறினார்.
கடவுள் மனசு வைச்சாதான் குழந்தை பிறக்கும் என்ற டாக்டர் ஷர்மிகாவின் கருத்து அறிவியலுக்கு எதிரானது என்று கூறி சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சனம் செய்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் டாக்டர் ஷர்மிகாவின் கருத்தைக் குறிப்பிட்டு மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
டாக்டர் ஷர்மிகா, கடவுள் மனசு வைச்சாதான் குழந்தை பிறக்கும் என்ற கருத்து குறித்து, CaptNesan என்ற ட்விட்டர் பயனர், “தட் கடவுள் நெனைச்சா மாசாமாசமும் குழந்தை பிறக்கும் காப்பர் T போட்டாலும் குழந்தை பிறக்கும் மொமன்ட்… தலைவி ஷர்மிகா சொன்னது உண்மையாயிருச்சேய்ய்ய்….” என்று கிண்டல் செய்துள்ளார்.
பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் என்ற ட்விட்டர் பயனர், “இவ்விடம் பாரம்பரிய முறையில் பாவங்களைப் போக்கி, நேச்சருடன் தொடர்பு ஏற்படுத்தி, குழந்தை உண்டாக்கித் தரப்படும். #ஷர்மிகா ஆர்மி
யாருடா அவன் நேச்சரு?” என்று வடிவேலு
Black Cat (Tribal) என்ற ட்விட்டர் பயனர், முதல்வன் பட மீம்ஸ் போட்டு, “நொங்கு சாப்புடுங்க தோழின்னு இன்பாக்ஸ் வரானுக தம்பி” என்று கிண்டல் செய்துள்ளார்.
Dr.Nellai-நெல்லை என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அலோ.. பாக்யராஜ் சார்… உங்க முருங்கைக்காய் மேட்டருக்கு போட்டியா நுங்கு டாக்டர் வந்திருக்காங்க சார்..” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
கெட்டங்க, கெட்ட எண்ணம் கொண்டவஞக்ளுக்கு குழந்தை பிறக்காது… – டாக்டர் ஷர்மிகா கூறியது குறித்து Periyar Peran என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “என்ன கன்றாவி சயின்ஸ் இது… கேட்க காது இருந்தால் சங்கி வாய் என்ன வேண்டுமானாலும் பேசுமாம்” என்று மீம்ஸ் மூலம் சாடியுள்ளார்.
இதற்கு முன்னர், நெட்டிசன்கள் யூடியூபர் டிடிஎஃப் வாசனை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது டாக்டர் ஷர்மிகா ட்ரோல் செய்யப்படுவதால், ஒரு ட்விட்டர் பயனர், “In Tamilnadu Now :
பழைய Patient TTF வாசன் டிஸ்சார்ஜ் பண்ணுங்க புது patient டாக்டர் ஷர்மிகா அட்மிட் பண்ணுங்க” என்று வசூல் ராஜா
ஜெகதீஷ்.கோ என்ற ட்விட்டர் பயனர், கவுண்டமணி மிம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளார்.
Nilavu Mozhi என்ற ட்விட்டர் பயனர், குழந்தை பெத்துக்க செக்ஸ் மட்டும் போதாதாம்; கடவுள் அனுக்கிரகம் இருக்கணுமாம். கோமிய டாக்டர்க்கு அடுத்ததா நொங்கு டாக்டர். கருமத்த” என்று டாக்டர் ஷர்மிகாவின் கருத்தை மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“