New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1407.jpg)
drunk man climbs up fence to sit on giraffe at kazakhstan zoo - ஜூவுக்கு போனா கை, காலை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும்... இல்லாட்டி இதான் நிலைமை
இவையெல்லாம் பரம் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத அந்த லைக் என்பதற்காக மட்டுமே. இந்த ஜோர்னல் வகையறாக்கள் கூட பரவாயில்லை. இவர்களால் யாருக்கு பாதிப்பில்லை
drunk man climbs up fence to sit on giraffe at kazakhstan zoo - ஜூவுக்கு போனா கை, காலை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும்... இல்லாட்டி இதான் நிலைமை
இந்த ஃபோனு, இன்டர்நெட்டு, வாட்ஸ் ஆப்பு, பேஸ்புக்குன்னு வந்த அப்புறம், நம்ம ஆளுங்களுக்கு கை கால் எதுவுமே சும்மா இருப்பதில்லை... காலைல தோச மாவு இல்லன்னா ஒரு போஸ்ட், கடைக்கு போய் மாவு வாங்கி வர்றதுக்கு ஒரு போஸ்ட், அதுல நாலு தோசை சுட்டு திங்கிறதுக்கு ஒரு போஸ்ட்-னு போட்டு நம் அன்றாட வாழ்க்கையையே பேஸ்புக் பக்கங்களில் நிரப்பி விடுகின்றனர்.
இவையெல்லாம் பரம் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத அந்த லைக் என்பதற்காக மட்டுமே. இந்த ஜோர்னல் வகையறாக்கள் கூட பரவாயில்லை. இவர்களால் யாருக்கும் பாதிப்பில்லை. ஆனால், இதே லைக்கிற்காக சாகசம் என்ற பெயரில் பைத்தியக்காரத்தன செயல்களில் ஈடுபடும் வகையறாக்கள் தான் பயங்கரமானவை. இவர்களின் செயல்களால் அவர்களுக்கும் ஆபத்து மற்றவர்களுக்கும் ஆபத்து.
அப்படிப்பட்ட வகையறாவில் இருந்து வந்த நபர் ஒருவர் கஜகஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் குடித்துவிட்டு ஒட்டகச்சிவிங்கியிடம் அடித்த லூட்டியை நீங்களே பாருங்கள்...
தற்போது அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.