போதையில் பாம்புடன் விளையாட முயன்ற இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரி வளாகத்துக்குள் புகுந்த பாம்பை, குடிபோதையில் இருந்த மதுபாபு நாகராஜு பிடிக்க முயன்றார். பின்னர், பாம்பு புதர்களுக்குள் தப்பியபோது, அவர் அந்த பாம்பை மீண்டும் கொண்டு வந்து அதனுடன் விளையாடத் தொடங்கினார். வைரலான வீடியோவில், நாகராஜு பாம்பின் தலையில் அடிப்பதைப் பார்க்க முடிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பாம்பு அவரைக் கடித்தது.
பாம்புடன் விளையாடும் நாகராஜுவை அருகில் இருப்பவர்கள் எச்சரிக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள எக்ஸ் பயனர் சுதாகர் உடுமுலா எழுதுகையில், “கவலைப்பட்ட பார்வையாளர்களின் சத்தமான எச்சரிக்கைகள் மற்றும் திட்டுகள் இருந்தபோதிலும், அவர் பொறுப்பற்ற முறையில் கைவிடப்பட்ட அந்த பாம்பை தொடர்ந்து கையாண்டார். நாகராஜுவை பாம்பு கடித்ததால், நிலைமை விபரீதமாக மாறியது. அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் உடனடியாக ஆம்புலன்சை அழைத்தனர். நாகராஜு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
Drunken Antics with Cobra in Kadiri Ends in Hospitalization
— Sudhakar Udumula (@sudhakarudumula) July 24, 2024
In a bizarre and dangerous incident, a young man named Nagaraju from Kadiri in Sathyasai district found himself in the hospital after deciding to play with a cobra while intoxicated.
The drama unfolded near a degree… pic.twitter.com/mjmuBqTAgT
69,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில் சமூக ஊடக பயனர்கள் கவலைகளை எழுப்பியதால் கமெண்ட்கள் குவிந்துள்ளது. இதற்கு பதிலளித்த ஒரு எக்ஸ் பயனர், “ஏன் யாரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை? அவரைச் சுற்றி வெகு சிலரே இருக்கிறார்கள். ஆம்புலன்சை அழைத்த மக்களுக்கு நன்றி” என்றார். மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “வீடியோ எடுப்பதற்குப் பதிலாக, யாராவது அவரை இழுத்து, பாம்பை தப்பிக்க அனுமதித்திருக்கலாம். பாம்பு நீண்ட நேரம் பொறுமையாக இருந்தது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“பாம்பு எப்படி எச்சரித்தது மற்றும் அதிகபட்சமாக கடிக்கத் தயங்கியது என்பதைக் கவனியுங்கள். மனிதர்களைவிட விலங்குகள் அதிக புத்திசாலித்தனமானவை” என்று மற்றொரு எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.