New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/21/drunk-man-takes-camel-2025-06-21-20-44-57.jpg)
மிதமிஞ்சிய மதுபோதையில் ஒட்டக சவாரி: பரபரப்பை ஏற்படுத்திய வினோத சம்பவம்!
ஹைதராபாத்தின் (Hyderabad) பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு ஒட்டகத்தை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மிதமிஞ்சிய மதுபோதையில் ஒட்டக சவாரி: பரபரப்பை ஏற்படுத்திய வினோத சம்பவம்!
Drunken Man Rides Camel: ஹைதராபாத்தின் (Hyderabad) பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு ஒட்டகத்தை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தலைக்கேறிய மதுபோதையில் இளைஞர் ஹைதராபாத் சாலையில் ஒட்டகம் ஓட்டிச்செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண சூழல்களிலேயே ஒட்டகங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற சூழலில், அந்நபர் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்தது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஹைதராபாத் மேம்பால சாலையில் ஒட்டகம் ஒன்று ஓடுகிறது. முதலில் பார்ப்பதற்கு அந்த ஒட்டகத்தின் மீது யாரும் இல்லாதது போல் தோன்றுகிறது. ஆனால், அந்த ஒட்டகத்தின் மீது ஒருவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அந்நபர் மது போதையில் ஒட்டகத்தை ஓட்டிச் செல்கிறார். அந்த நபர் மயங்கி மயங்கி விழும் நிலையில், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அந்த ஒட்டகம் சாலையின் அந்த பக்கமும் இந்த பக்கமுமாக ஓடுகிறது.
சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையிலும் அந்த ஒட்டகம் ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், ஒட்டகத்திற்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.